Newsசர்வதேசப் புகழ் பெற்ற ஈழத்து 32 வயது ஆங்கில எழுத்தாளர்: அனுக்...

சர்வதேசப் புகழ் பெற்ற ஈழத்து 32 வயது ஆங்கில எழுத்தாளர்: அனுக் அருட்பிரகாசம்

-

அனுக் அருட்பிரகாசம்1988 ஆம் ஆண்டு பிறந்த இலங்கையை சேர்ந்த 32 வயது ஆங்கில எழுத்தாளர்.

தமிழிலும் எழுதுபவர். தமிழ் ஈழப் போராட்ட வாழ்வியலை வரலாற்றின் பின்னணியில் வைத்துப் பேசும் ஆங்கிலத்தில் இவரது எழுத்துகள் சர்வதேசப் பார்வை கொண்டவை.

ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்று கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தத்துவப் பிரிவில் டாக்டர் பட்டம் பெற்றவர். இவர் எழுதிய ஆங்கில நாவல்களின் மூலம் சர்வதேச கவனத்தைக் கவர்ந்துள்ள ஈழத் தமிழரான அனுக் அருட்பிரகாசம் ஆங்கில எழுத்தின் மூலம் உலகக் கவனத்தை ஈர்க்கும் இளைய சக்தியாக வளர்ந்து வருகிறார்.

எனது நண்பரும் ஜெர்மானிய எழுத்தாளருமான சாஸா ஸ்டானிசிக் போல தங்களது உள்நாட்டுப் போரைச் சுற்றி பின்னப்பட்ட கதைகளின் மூலம் இலக்கியத்தில் தனக்கென தனி இடத்தைப் பிடித்து இருக்கிறார்.
2016இல் வெளிவந்த இவரது The Story of a Brief Marriage எனும் ஆங்கில நாவல் பிரெஞ்சு, ஜெர்மன், செக், மாண்டரின் சீனம், டச்சு, இத்தாலி மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இந்நாவல் 2009இல் நிகழ்ந்த ஈழத்தின் இறுதிக்கட்ட உள்நாட்டுப் போரை, மையமாகக் கொண்டு எழுதப்பட்டது. ”இது “ அப்பாவிகளுக்கும் வரலாற்றில் ஒரு இடத்தைப் பெற்றுக் கொடுக்கும் ஒரு நாவல்” என்றும் “மனிதகுலத்தின் மாண்பின் முன்னால் மண்டியிட வைக்கிறது “ என்றும் The New York Times இதழால் பாராட்டப்பட்டது. ”2016இல் வெளிவந்த மிகச் சிறந்த நாவல்” என்று The Wall Street Journal, NPR, Financial Times. இதழ்களால் கணிக்கப்பட்டது.

இவரது இரண்டாவது நாவலான A Passage North (2021) என்பது ஈழத்தின் உள்நாட்டுப் போரின் வன்முறைகளைப் பேசும் ஒரு நாவல்.

இவர் தற்போது எழுதிக் கொண்டிருக்கும் நாவலில் நியூயார்க், டொரொண்ட்டோ ஆகிய இடங்களில் வாழும் புலம்பெயர்ந்த அம்மாக்கள், மகள்கள் பற்றியதாக அமைகிறது.

Latest news

திரும்ப அழைக்கப்பட்டுள்ள Power bank மாடல்கள்

பல்வேறு Power Bankகள் அதிக வெப்பமடைந்து தீப்பிடித்து எரியக்கூடும் என்ற அச்சம் இருப்பதால், அவற்றைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்துமாறு நுகர்வோருக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது. Amazon, eBay மற்றும் Anker...

3,800 ஆண்டுகள் பழமையான தொலைந்து போன நகரம் கண்டுபிடிப்பு

பெருவின் வடக்கு பாரன்கா பகுதியில், கிமு 1800 முதல் 1500 வரையிலான காலத்தைச் சேர்ந்த ஒரு பழங்கால, தொலைந்து போன நகரத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பெனிகோ...

விக்டோரியாவில் 14 ஆண்டுகளில் முதல் முறையாக அதிகரித்துள்ள சாலை விபத்து இறப்புகள்

கடந்த 72 மணி நேரத்தில் விக்டோரியாவில் நடந்த பத்து விபத்துகளில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மெல்பேர்ணின் வடகிழக்கில் நேற்று காலை இரண்டு வாகனங்கள் மோதியதில்...

மூன்றாம் உலகப் போர் குறித்து நேட்டோ எச்சரிக்கை

சீன ஜனாதிபதியும் ரஷ்ய பிரதமரும் ஒரே நேரத்தில் ஆக்கிரமிப்பதன் மூலம் மூன்றாம் உலகப் போர் தொடங்கும் என்று நேட்டோ தலைவர் மார்க் ருட்டே கூறுகிறார். சீன மற்றும்...

மேற்கு ஆஸ்திரேலியாவின் Karijini தேசிய பூங்கா நீச்சல் தளத்தில் விழுந்த குழந்தை

மேற்கு ஆஸ்திரேலியாவின் Karijini தேசிய பூங்காவில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்த ஒரு சிறு குழந்தையை அவசர சேவைகள் மீட்டுள்ளன. பிரபலமான Dales Gorge நீச்சல் தளத்தில் சிறுவன்...

45 வயது நபரை மணந்த 6 வயது சிறுமி

ஆப்கானிஸ்தானில் இருந்து ஆறு வயது சிறுமியை 45 வயது ஆணுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சி நடந்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பெண்ணை அவளது தந்தை...