நாளை (12) முதல் அடுத்த 03 நாட்களுக்கு விக்டோரியா மாநிலத்தின் பல பகுதிகளில் கடுமையான மோசமான வானிலை நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வானிலை மற்றும் பேரிடர் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கைகளுக்கு மக்கள் செவிசாய்க்குமாறு இன்று செய்தியாளர் சந்திப்பில் மாநில பிரதமர் டேனியல் ஆண்ட்ரூஸ் வலியுறுத்தினார்.
இந்த ஆண்டு விக்டோரியாவை தாக்கும் மோசமான வானிலை இதுவாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் ஏற்படக்கூடும் என்றும் பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டால், விக்டோரியர்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறும், அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் தயாராக வைத்திருக்குமாறும் பிரதமர் டேனியல் ஆண்ட்ரூஸ் வலியுறுத்தினார்.