Newsஜனனி குறித்து வெளியான சுவாரஸ்ய தகவல்கள்

ஜனனி குறித்து வெளியான சுவாரஸ்ய தகவல்கள்

-

விஜய் டிவியில் ஒளிப்பரப்படும் முன்னணி நிகழ்ச்சியான பிக் பாஸில் இலங்கையை சேர்ந்த ஒருவர் போட்டியாளராக வருவது வழக்கம். ஏனெனில் அப்போதுதான் புலம் பெயர் இலங்கையர்களும் நிகழ்வை ஆர்வமுடன் பார்ப்பார்கள் என விஜய் டிவி கணித்துள்ளது.

அவர்கள்து கணிப்பை இதுவரை புலம்பெயர் தமிழர்கள் பொய்யாக்கியதுஇல்லை. அந்தவகையில் லாஸ்லியா தர்சனை தொடர்ந்து யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜனனி பிக்பாஸ் 6 இல் களம் இறங்கியுள்ளார்.

நிகழ்ச்சிக்குள் நுழைந்த அன்றே ரசிகர்கள் பலரின் கவனத்தை ஜனனி ஈர்த்துவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.

யார் இந்த ஜனனி?

21 வயதான ஜனனி குணசீலன் இலங்கையின் புகழ்பெற்ற யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். ஆரம்பத்தில் டிக்டாக் மூலம் சமூக வலையத்தளங்களில் பிரபலமாகியதோடு, சில குறும்படங்களிலும் நடித்ததுடன், ஐபிசி தமிழ் சேனலில் தொகுப்பாளராக இருந்தார்.

இன்ஸ்டாகிராமில் இவரை சுமார் 18.3k பின் தொடர்வதுடன் இவர் இலங்கையில் ஒரு மாடலாகவும் இருந்து வருகிறார்.

அதேவேளை இலங்கையில் பாரம்பரியத்திற்கும் பெருமைக்கும் பெயர் போன யாழ்ப்பாணத்தில் பிறந்த ஜனனி, தமிழ் சினிமா மற்றும் சிறிய திரை தொலைக்காட்சி துறையில் நன்கு அறியப்பட்ட கலைஞர்களுடன், அவர்களுக்கு பரிட்சயமே இல்லாத ஜனனி போட்டியிட்டு நாட்டிற்கு பெருமை சேர்ப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

அதேவேளை லாஸ்லியாவை கொண்டாடியதுபோல தற்போதே ஜனனிக்கு ஆர்மி தொடங்கிவிட்டார்கள் அவரது ரசிகர்கள். அதுமட்டுமல்லாது ஜனனியின் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் அழகில் லாஸ்லியாவையே தூக்கி அடித்துவிடுவார் என நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்

Latest news

ஒரு நாளைக்கு குப்பைக்கு செல்லும் ஒரு பில்லியன் உணவுகள்

உலகம் முழுவதும் 800 மில்லியன் மக்கள் பட்டினி கிடக்கும் வேளையில், மக்கள் ஒரு நாளைக்கு ஒரு பில்லியனுக்கும் அதிகமான உணவை வீணடிப்பதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஐக்கிய...

ஈஸ்டர் ஆராதனைக்கு சென்ற 45 பேர் பலி

தென்னாப்பிரிக்காவில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்த நிலையில் 8 வயது சிறுமி மட்டும் உயிர் பிழைத்துள்ளார். அவர்கள் பயணித்த பேருந்து பாலத்தில் இருந்து கவிழ்ந்து வடகிழக்கு...

சீனாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு ஒரு நற்செய்தி

ஆஸ்திரேலிய ஒயின் மீதான வரிகளை நீக்க சீனா நகர்ந்து, பில்லியன் டாலர் ஏற்றுமதி சந்தையை மீண்டும் திறக்கிறது. பல ஆண்டுகளாக இந்த வரிகளால் தடைப்பட்டிருந்த $1.1 பில்லியன்...

பெட்ரோல் நிலையங்களுக்கு செல்லும் ஆஸ்திரேலிய வாகன ஓட்டிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஆஸ்திரேலிய வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிலையங்களில் இருந்து எரிபொருளை வாங்கும் முன் விலையை இருமுறை சரிபார்க்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சில பெட்ரோல் நிலையங்களில் விலைகள் தவறாகக்...

பாதகமான நிலையில் உள்ள காப்பீடு செய்யப்படாத ஆஸ்திரேலியர்கள்

தனியார் மருத்துவக் காப்பீடு இல்லாத ஆஸ்திரேலியர்கள் அத்தியாவசிய அறுவை சிகிச்சைகள் செய்வதற்கு ஒரு வருடத்திற்கும் மேலாக காத்திருப்போர் பட்டியலில் இருக்க வேண்டும் என்று சமீபத்திய கணக்கெடுப்பில்...

வருமானத்தில் கால் பகுதியை மளிகைப் பொருட்களுக்கு செலவிடும் ஆஸ்திரேலியர்கள்

பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள் தங்கள் வருமானத்தில் கால் பகுதியை மளிகைப் பொருட்களுக்கு செலவிடுகிறார்கள் என்று தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலிய நுகர்வோர் ஆணையம் நடத்திய ஆய்வின்படி, இளம் ஆஸ்திரேலியர்கள் மற்றும் குறைந்த...