Newsஜனனி குறித்து வெளியான சுவாரஸ்ய தகவல்கள்

ஜனனி குறித்து வெளியான சுவாரஸ்ய தகவல்கள்

-

விஜய் டிவியில் ஒளிப்பரப்படும் முன்னணி நிகழ்ச்சியான பிக் பாஸில் இலங்கையை சேர்ந்த ஒருவர் போட்டியாளராக வருவது வழக்கம். ஏனெனில் அப்போதுதான் புலம் பெயர் இலங்கையர்களும் நிகழ்வை ஆர்வமுடன் பார்ப்பார்கள் என விஜய் டிவி கணித்துள்ளது.

அவர்கள்து கணிப்பை இதுவரை புலம்பெயர் தமிழர்கள் பொய்யாக்கியதுஇல்லை. அந்தவகையில் லாஸ்லியா தர்சனை தொடர்ந்து யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜனனி பிக்பாஸ் 6 இல் களம் இறங்கியுள்ளார்.

நிகழ்ச்சிக்குள் நுழைந்த அன்றே ரசிகர்கள் பலரின் கவனத்தை ஜனனி ஈர்த்துவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.

யார் இந்த ஜனனி?

21 வயதான ஜனனி குணசீலன் இலங்கையின் புகழ்பெற்ற யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். ஆரம்பத்தில் டிக்டாக் மூலம் சமூக வலையத்தளங்களில் பிரபலமாகியதோடு, சில குறும்படங்களிலும் நடித்ததுடன், ஐபிசி தமிழ் சேனலில் தொகுப்பாளராக இருந்தார்.

இன்ஸ்டாகிராமில் இவரை சுமார் 18.3k பின் தொடர்வதுடன் இவர் இலங்கையில் ஒரு மாடலாகவும் இருந்து வருகிறார்.

அதேவேளை இலங்கையில் பாரம்பரியத்திற்கும் பெருமைக்கும் பெயர் போன யாழ்ப்பாணத்தில் பிறந்த ஜனனி, தமிழ் சினிமா மற்றும் சிறிய திரை தொலைக்காட்சி துறையில் நன்கு அறியப்பட்ட கலைஞர்களுடன், அவர்களுக்கு பரிட்சயமே இல்லாத ஜனனி போட்டியிட்டு நாட்டிற்கு பெருமை சேர்ப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

அதேவேளை லாஸ்லியாவை கொண்டாடியதுபோல தற்போதே ஜனனிக்கு ஆர்மி தொடங்கிவிட்டார்கள் அவரது ரசிகர்கள். அதுமட்டுமல்லாது ஜனனியின் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் அழகில் லாஸ்லியாவையே தூக்கி அடித்துவிடுவார் என நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்

Latest news

ஆஸ்திரேலிய சந்தைக்கு வரும் ஒரு புதிய மின்சார கார்

இந்த ஆண்டு ஆஸ்திரேலிய சந்தையில் ஒரு புதிய மின்சார கார் வர உள்ளதாக கூறப்படுகிறது. பொதுமக்களால் மலிவு விலையில் வாங்கக்கூடிய Hatchback ரக கார்கள் சந்தைக்கு வர...

நீண்ட வார இறுதியில் விக்டோரியாவுக்குச் செல்வோருக்கான சிறப்பு அறிவிப்பு

வரவிருக்கும் நீண்ட வார இறுதியில் பயணம் செய்யத் திட்டமிடும் விக்டோரியர்களுக்கு அதிகாரிகள் சிறப்பு பாதுகாப்பு ஆலோசனைகளை வெளியிட்டுள்ளனர். மாநிலத்தின் பல பகுதிகளில் காட்டுத்தீ இன்னும் தீவிரமாக உள்ளது. காட்டுத்தீ...

மீண்டும் இயக்கப்படும் உலகின் மிகப் பெரிய அணுமின் நிலையம்

ஜப்பானில் உள்ள உலகின் மிகப் பெரிய அணுமின் நிலையம் மீண்டும் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியில்...

ஆஸ்திரேலிய தினத்தைக் கொண்டாட வருபவர்களுக்கான சிறப்பு அறிவிப்பு

வரும் 26 ஆம் திகதி வரும் ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு, சிட்னி ஓபரா ஹவுஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியை பலத்த பாதுகாப்பு வளையத்துடன் மூட...

ஆஸ்திரேலிய தினத்தைக் கொண்டாட வருபவர்களுக்கான சிறப்பு அறிவிப்பு

வரும் 26 ஆம் திகதி வரும் ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு, சிட்னி ஓபரா ஹவுஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியை பலத்த பாதுகாப்பு வளையத்துடன் மூட...

12 ஆண்டுகளுக்குப் பிறகு முடிவுக்கு வந்த சிட்னி Lockout சட்டங்கள்

சிட்னியின் இரவு நேர பொருளாதாரத்தை கடுமையாக பாதித்த Lockout சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட 12வது ஆண்டு நிறைவையொட்டி, Minns தொழிற்கட்சி அரசாங்கம் அந்தச் சட்டங்கள் முற்றிலுமாக ரத்து...