Newsஇலங்கைக்கான ஆஸ்திரேலியத் தூதுவரிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

இலங்கைக்கான ஆஸ்திரேலியத் தூதுவரிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

-

நலிவுற்றோரை அடையாளம் காணும் அளவுகோல்கள் பற்றி இலங்கை அரசிடம் கேள்வி எழுப்ப வேண்டும் என இலங்கைக்கான ஆஸ்திரேலியத் தூதுவரிடம் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் வலியுறுத்தினார்.

இலங்கைக்கும், மாலைதீவுக்குமான ஆஸ்திரேலியத் தூதுவர் போல் ஸ்டீபனைத் தூதுவரின் கொழும்பு இல்லத்தில் நேற்று சந்தித்து உரையாடியபோதே மேற்கண்டவாறு தாம் வலியுறுத்தினார் என்று மனோ கணேசன் எம்.பி. இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

“சமீபத்தில் நான் ஆஸ்திரேலியாவுக்கு மேற்கொண்ட அதிகாரபூர்வ பயணம் தொடர்பில் உரையாடினோம். ஆஸ்திரேலியாவில் திகழும் பன்மைத்துவ கலாச்சாரம் பற்றிய பாடங்கள் இலங்கைக்கு அவசியம் என்பதை ஆஸ்திரேலியத் தூதுவர் போல் ஸ்டீபனுக்குத் தெரிவித்தேன்.
குறிப்பாக ஆஸ்திரேலிய அரசு மற்றும் அரசு நிலை அரசியல் பிரமுகர்கள் அங்கு வாழும், இலங்கையர்களுடன் குறிப்பாக புலம்பெயர்ந்துள்ள சிங்கள ஆஸ்திரேலியர்களுடனும், அவர்களது அமைப்புகளுடனும் தொடர்புகளை மேம்படுத்தி அவர்கள் மூலம் பன்மைத்துவ சிந்தனையை இலங்கைக்குள் கொண்டு வர உதவ வேண்டுமென வலியுறுத்தினேன்.

இலங்கையின் நெருக்கடி நிலைமையும், அதற்கான மாற்றமும் வெறுமனே பொருளாதார விடயங்களை சார்ந்தது அல்ல என்ற எமது நிலைபாட்டை அவருக்கு வலியுறுத்தினேன்.

பொருளாதார விடயங்களுக்கு அப்பால், மூல காரணமாக திகழ்வது இலங்கையில் பன்மைத்துவ கொள்கை ஏற்றுக்கொள்ளப்படாமையே என்ற தமிழ் மக்களின் எண்ணப்பாட்டை அவருக்கு சுட்டிக்காட்டினேன். ஆகவே, இலங்கையில் ஏற்படுகின்ற எந்தவொரு மாற்றமும் இலங்கை பன்மொழி, பன்மத, பல்லின நாடு என்ற பன்மைத்துவ கொள்கை அரசமைப்பு ரீதியாக ஏற்றுக்கொள்ளப்படுவதிலேயே தங்கியுள்ளது. அதுவே மாற்றத்துக்கான ஆரம்பப்புள்ளி எனத் தெளிவுபடுத்தினேன்.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை, மலையகத் தமிழர்கள், மிகவும் பின்தங்கிய தோட்டத் தொழிலாளர்கள், நடைபெற்ற அரகலய கிளர்ச்சி, எதிர்க்கட்சிகளின் உடனடித் தேர்தலுக்கான கோரிக்கை ஆகியவை பற்றியும் உரையாடினோம்.” – எனவும் மனோ குறிப்பிட்டார்.

Latest news

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...

பாலிக்குச் செல்லும் ஆஸ்திரேலியர்களுக்கு கடுமையான விதிகள்

பல ஆஸ்திரேலியர்கள் விடுமுறை கிடைத்தவுடன் பாலிக்குச் செல்ல ஆர்வமாக உள்ளனர். கடற்கரைக்குச் செல்ல MOPED அல்லது மோட்டார் சைக்கிள்களை வாடகைக்கு எடுப்பது அவர்களுக்குப் பழக்கமாகிவிட்டது. ஆனால் பாலி அதிகாரிகள்...