Newsஆஸ்திரேலியா செல்ல இலங்கையர்கள் கண்டுபிடித்த வழி

ஆஸ்திரேலியா செல்ல இலங்கையர்கள் கண்டுபிடித்த வழி

-

இலங்கையில் இருந்து கடந்த ஓராண்டில் 183 பேர் ஆஸ்திரேலியாவுக்கு சட்ட விரோதமாக நுழைய முயன்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் பலர் இந்தியாவின் கேரளா வழியாக நுழைய முயன்றதாகவும் ஆஸ்திரேலியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தலைவர் டெல்லியில் அக்டோபர் 14ம் திகதி முதலாம் 20ம் திகதிவரை நஎடைபெற்ற ஆசிய கடலோர காவல்படை அமைப்புகளின் தலைவர்கள் கூட்டத்தில் ஆஸ்திரேலியாவின் ரியர் அட்மிரல் ஜோன்ஸ் பங்கேற்றிருந்தார்.

இதில் அவர் பேசியபோது, ஆசிய கடலோர காவல்படை அமைப்புகளின் தலைவர்கள் கூட்டத்தின் மூலமாக ஆஸ்திரேலியா, ஆசிய பிராந்தியத்தில் உள்ள அனைத்து முக்கிய கடலோர காவல் முகமைகளுடன் நீண்டகால உறவுகளை ஏற்படுத்தி அதை வலுப்படுத்தவும் சிவில் கடல்சார் பாதுகாப்பு விஷயங்களில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்று தெரிவித்தார்.

மேலும், கடலில் நடைபெறும் குற்றங்களை எதிர்த்து போராடி அவற்றைத் தடுப்பதற்கு இந்த மண்டலத்தில் உள்ள அனைத்து கூட்டு செயல்பாட்டு நாடுகளுடன் நெருக்கமாக பணியாற்றுவதற்கு ஆஸ்திரேலியா உறுதிபூண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். ஆஸ்திரேலியா சமீபகாலமாக சிவில் கடல்சார் பாதுகாப்பில் இலங்கையுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டு கடல்வழி ஆட்கள் கடத்தல் முயற்சிகளைத் தடுக்க இலங்கை கடற்படை அயராது உழைத்ததால் கடத்தல் மூலமாக ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முயன்ற 183 பேரை ஆஸ்திரேலியா திருப்பி அனுப்பியுள்ளது என்றும் சமீபத்தில் கேரளாவில் இருந்து படகு மூலமாக சட்டவிரோதமாக இடம்பெயர முயன்ற பலர் கைது செய்யப்பட்டதை அறிந்துள்ளதாகவும்அவர் தெரிவித்தார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் மலிவு விலையில் வீடுகள் காணப்படும் பகுதிகள்

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த விலையில் உள்ள புறநகர்ப் பகுதிகளை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி, பிரிஸ்பேன்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ம் பியர் விலை

அவுஸ்திரேலியாவில் பியர் மீதான வரி அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதால் பியர் விலை உயரும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி அதிகரிப்பு நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்...

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக உள்ள ரஷ்யா!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல்கள்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

ஒலிம்பிக் சரித்திரம் படைத்த ஆஸ்திரேலியாவின் ரக்பி அணி

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில்...