Newsதண்டனைகளை அதிகரிக்கத் திட்டமிடும் ஆஸ்திரேலியா!

தண்டனைகளை அதிகரிக்கத் திட்டமிடும் ஆஸ்திரேலியா!

-

இணையத் தாக்குதலில் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் திருடப்படும் சம்பவங்களில் நிறுவனங்களுக்கு எதிரான தண்டனையை அதிகரிக்க ஆஸ்திரேலியா திட்டமிடுகிறது.

கடந்த சில வாரங்களில் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலிய மக்களின் தனிப்பட்ட விவரங்கள் திருடப்பட்டுள்ளன.

தொலைத்தொடர்பு, நிதி, அரசாங்கத்துறைகள் உச்ச விழிப்புநிலையில் உள்ளன. கடந்த மாதம் ஆஸ்திரேலியாவில் Singtel நிறுவனத்துக்குச் சொந்தமான Optus நிறுவனம் இணையத் தாக்குதலுக்கு இலக்கானது.

சுமார் 10 மில்லியன் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் திருடப்பட்டன. இம்மாதம் ஆஸ்திரேலியாவின் சுகாதாரக் காப்புறுதி நிறுவனமான Medibank Private இணையத் தாக்குதலுக்கு ஆளானது.

100 வாடிக்கையாளர்களின் மருத்துவ விவரம் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் திருடுபோயின.தனிப்பட்ட விவரங்கள் களவாடப்படும் நிறுவனங்களுக்குச் சுமார் இரண்டே கால் மில்லியன் ஆஸ்திரேலிய டொலர் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.

அதை 50 மில்லியன் ஆஸ்திரேலிய டொலர் வரை உயர்த்தத் திட்டமிடப்படுகிறது.

வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்களைக் கேட்டு வாங்கும்போது அதைப் பாதுகாப்பது நிறுவனத்தின் கடமை என்று ஆஸ்திரேலிய அரசாங்கம் கூறியது.

Latest news

Casey தெருக்களில் பார்க்கிங் தொடர்பான சிறப்பு அறிவிப்பு

Casey நகரில் உங்கள் வீட்டிற்கு முன்னால் உள்ள தெரு தனியார் சொத்து அல்ல என்றும், அந்த இடத்தில் உங்களுக்கு எந்த சிறப்பு உரிமையும் இல்லை என்றும்...

ஆஸ்திரேலிய விமானப்படை தளத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட Qantas விமானம்

தெற்கு ஆஸ்திரேலியா நோக்கிச் சென்ற Qantas விமானம் நேற்று இரவு பாதுகாப்புப் படை தளத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பலத்த காற்று காரணமாக அடிலெய்டு விமான நிலையத்தில் தரையிறங்குவதை...

விக்டோரியா காட்டுத்தீயால் செம்மறி ஆடு வளர்ப்பவர்களுக்கு பெரும் சேதம்

விக்டோரியா முழுவதும் பரவியுள்ள காட்டுத்தீயால் கால்நடைகளுக்கு ஏற்பட்ட சேதம் 20 மில்லியன் டாலர்களை தாண்டும் என்று விக்டோரியன் விவசாயிகள் கூட்டமைப்பு மதிப்பிட்டுள்ளது. இதுவரை 40,000க்கும் மேற்பட்ட கால்நடைகள்...

ஆஸ்திரேலியாவிற்கு வரும் ஊதா நிற தக்காளி

ஒழுங்குமுறை ஒப்புதலைப் பெற்ற பிறகு, மரபணு மாற்றப்பட்ட ஊதா நிற "Purple Bliss" தக்காளி சில மாதங்களுக்குள் ஆஸ்திரேலிய பழக் கடைகளுக்கு வந்து சேரும். இது ஆஸ்திரேலியாவில்...

BBQ அடுப்பு வெடிப்பு – இரு குழந்தைகள் உட்பட நால்வர் காயம்

நியூ சவுத் வேல்ஸ் தெற்கு கடற்கரையில் உள்ள Conjola ஏரியில் உள்ள Big4 holiday park-இல் ஏற்பட்ட BBQ வெடிப்பில் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்...

இரட்டிப்பாகிய விக்டோரியாவின் காட்டுத்தீ நிவாரணத் தொகுப்பு

விக்டோரியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நிதியை மத்திய மற்றும் மாநில அரசுகள் இரட்டிப்பாக்கியுள்ளன. புதிய உதவித் தொகுப்பின் கீழ் கூடுதலாக $160 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது....