ஆஸ்திரேலியாவில் 05 ஆண்டுகளுக்குள் 10 லட்சம் வீடுகள் கட்டும் திட்டத்தை தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
2024ஆம் ஆண்டு முதல் தொடங்கும், இந்த நடவடிக்கையின் கீழ் இது போன்ற மலிவு விலைகளில் வீடுகள் கட்டப்படும் என குறிப்பிடப்படுகின்றது.
இது தொடர்பான பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்ட ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்காக 350 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட உள்ளது.
அடுத்த 02 வருடங்களில் வீடுகளின் விலை 20 வீதத்தால் குறையும் என அண்மைய வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.