ஆஸ்திரேலியாவில் வெள்ள நிலவரம் மோசமடைந்து வருகிறது. நாட்டின் கிழக்குப் பகுதி உச்ச விழிப்பு நிலையில் உள்ளது.
வெள்ளம் புகுந்ததால் ஆயிரக் கணக்கானோர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
மூன்று வாரங்களாக ஆஸ்திரேலியாவில் கனத்த மழை பெய்து வருகிறது. நிலைமை மோசமானால் ஆறுகள் கரைகளை உடைத்துப் பாயும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
நியூ சௌத் வேல்ஸ், விக்டோரியா மாநிலங்களில் உள்ள 200 இடங்களில் வெள்ள எச்சரிக்கை நடப்பில் உள்ளது.
அந்த இரண்டு மாநிலங்களிலும் ஆயிரக் கணக்கான வீடுகளைச் சூழ்ந்துள்ளது வெள்ளம். பயங்கரமான சேதம் ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறினர். மழை, வெள்ளத்தில் சிக்கி 6 பேர் மாண்டனர்.
நிவாரணப் பணிகளைத் விரைவுபடுத்த 370 மில்லியன் டொலர் நிதி தனியே ஒதுக்கப்படும் என்று ஆஸ்திரேலிய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.