ஆஸ்திரேலியாவில் தற்போதைய பணவீக்கச் சூழலால் 2024ஆம் ஆண்டு வரை சம்பள உயர்வை வழங்குவது கடினம் என மத்திய நிதித்துறை அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்த அவர், இந்த ஆண்டு இறுதிக்குள் பணவீக்கம் 7.75 சதவீதமாக உயரக்கூடும் என்றார்.
2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இது 3.5 சதவீதமாகக் குறையக்கூடும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அடுத்த சில மாதங்களில் ஆஸ்திரேலியாவின் பொருளாதாரம் 3.35 சதவீதமாக அதிகரிக்கலாம், ஆனால் 2023-24க்குள் 1.5 சதவீதமாகக் குறையலாம் என்று அவர் கணித்துள்ளார்.
இதற்கிடையில், இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் ஓய்வு பெற்றவர்கள் தங்கள் ஓய்வூதியத்துடன் அதிகபட்சமாக 4000 டொலர் வருமானம் ஈட்டலாம் என்ற திட்டமும் சேர்க்கப்பட்டுள்ளது.