பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்த ஆஸ்திரேலியர்களுக்கு குறைந்தபட்சம் 6600 டொலர் ஆண்டு ஊதிய உயர்வு தேவை என்று பொருளாதார ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
Canstar வெளியிட்ட சமீபத்திய அறிக்கை, கடந்த ஆண்டில் குறைந்தபட்சம் 6,637 டொலர் மதிப்புள்ள விலை உயர்வுகளைக் காட்டுகிறது.
32 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆஸ்திரேலியாவில் பணவீக்கம் மிக உயர்ந்த விகிதத்தில் வளர்ந்து தற்போது 7.3 சதவீதமாக உள்ளது.
வரவு செலவுத் திட்ட உரையை நிகழ்த்திய மத்திய திரைச்சேரி அமைச்சர் ஜிம் சால்மர்ஸ், அடுத்த 02 ஆண்டுகளில் மின் கட்டண விகிதங்கள் 50 சதவீதம் அதிகரிக்கலாம் என்று குறிப்பிட்டார்.
ஜூன் 2024க்குள், ஆஸ்திரேலியர்களின் மாதாந்திர சேமிப்பு விகிதம் 3.25 சதவீதமாகக் குறையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.