ஆஸ்திரேலியாவில் பயணிகள் மற்றும் ஓட்டுநர்களுக்கான கோவிட் விதிமுறைகளை கிட்டத்தட்ட 02 ஆண்டுகளுக்கு தளர்த்த Uber முடிவு செய்துள்ளது.
அதற்கமைய, இனி வாகனங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை.
எவ்வாறாயினும், வயதானவர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருப்பவர்கள் முகக்கவசம் அணிவதை தொடர்ந்து அணியுமாறு பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.
ஓட்டுநர் இருக்கைக்கு அடுத்த இருக்கையில் பயணிகள் ஏறக்கூடாது என்ற முந்தைய விதியும் நீக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று முதல் அதிகபட்சமாக 04 பேர் Uber மூலம் பயணிக்க முடியும்.