Newsஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு - சமாளிக்க முடியாமல் திணறல்

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு – சமாளிக்க முடியாமல் திணறல்

-

ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் வெண்ணெய் முதல் பால்மாவு வரை பால் பொருள்களுக்குப் பஞ்சம் ஏற்படக்கூடிய அபாயம் எழுந்துள்ளது.

அளவுக்கு அதிகமான வெப்பமும் வறட்சியும் மாடுகளுக்கு மனவுளைச்சலை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அது குறித்து Bloomberg செய்தி நிறுவனம் தகவல் அளித்தது. அதிகரிக்கும் வெப்பநிலையால் பசுக்கள் குறைந்த பாலை உற்பத்தி செய்கின்றன..

வறட்சி, கடுமையான மழை ஆகியவற்றால் சாப்பிடக்கூடிய புல்லும் அவ்வளவாக இல்லை என கூறப்படுகின்றது.

உலகின் பால் உற்பத்தி வட்டாரங்கள் சிக்கலைச் எதிர்நோக்குகின்றன. அமெரிக்காவின் பால் பொருள் உற்பத்தித்துறை இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் ஆண்டுதோறும் 2.2 பில்லியன் டொலர் இழக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் சிலர் முன்னுரைத்துள்ளனர்.

பால் பொருள்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றான ஆஸ்திரேலியாவில் பண்ணையாளர்கள் சிலர் நிலைமையைச் சமாளிக்க முடியாமல் தொழிலை விட்டு விலகுகின்றனர்.

அந்நாட்டில் பால் பொருள்களின் உற்பத்தி இவ்வாண்டு அரை மில்லியன் மெட்ரிக் டன் வரை குறையக்கூடும் என்று Bloomberg குறிப்பிட்டுள்ளது.

உலகில் ஆக அதிக அளவில் பாலை உற்பத்தி செய்யும் இந்தியா, உலகின் பால் பொருள்களில் கால்வாசியை வழங்குகிறது. அந்நாட்டில் பால் பெரும்பாலும் சிறு பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படுகிறது.

பண்ணையாளர்கள் வெப்பத்தைத் தணிக்கக் குளிரூட்டும் கருவிகளை வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இருப்பினும் சிலருக்கு அது கட்டுப்படியான தெரிவு அல்ல.

Amul போன்ற மாபெரும் நிறுவனங்கள் இருப்பைப் பாதுகாப்பதற்கான சவாலைச் சந்திக்கின்றன. நிலைமை தொடர்ந்தால் வருங்காலத்தில் பால் பொருள்களுக்குக் கூடுதல் கட்டணம் செலுத்தவேண்டி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest news

வெனிசுலாவில் பெப்ரவரி 3 ஆம் திகதி வரை இலவச இணையசேவை

வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள அதிரடி அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், அந்நாட்டு மக்களுக்கு இலவச இணைய சேவையை வழங்குவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க...

மின்சார வாகன சந்தையில் தனது கிரீடத்தை இழக்கும் Tesla

பல ஆண்டுகளாக உலகின் முன்னணி மின்சார வாகன உற்பத்தியாளராக இருந்த எலான் மஸ்க்கின் Tesla, தனது இடத்தை இழந்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் சாதனை விற்பனையை எட்டிய...

வெனிசுலா மீதான டிரம்பின் தாக்குதல்கள் குறித்து உலகத் தலைவர்கள் கூறுவது என்ன?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவி சிலியா புளோரஸையும் கைது செய்த பிறகு உலகத் தலைவர்கள் வெவ்வேறு வழிகளில்...

குழந்தைகளைப் பாதுகாக்க குயின்ஸ்லாந்து அரசின் புதிய சட்டம்

குயின்ஸ்லாந்துவாசிகள் மற்றும் அவர்களது குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்துடன், 'டேனியல் சட்டத்தின்' (Daniel’s Law) கீழ், தண்டனை பெற்ற குழந்தை பாலியல் குற்றவாளிகள் பற்றிய...

திருமணம் செய்தார் பெர்த் கால்பந்து சூப்பர் ஸ்டார்

பெர்த் கால்பந்து சூப்பர் ஸ்டார் சாம் கெர் மற்றும் அவரது புதிய மனைவி கிறிஸ்டி மெவிஸ் ஆகியோர் தங்கள் திருமணத்தின் முதல் அதிகாரப்பூர்வ புகைப்படங்களை சமூக...

மின்சார வாகன சந்தையில் தனது கிரீடத்தை இழக்கும் Tesla

பல ஆண்டுகளாக உலகின் முன்னணி மின்சார வாகன உற்பத்தியாளராக இருந்த எலான் மஸ்க்கின் Tesla, தனது இடத்தை இழந்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் சாதனை விற்பனையை எட்டிய...