ஆஸ்திரேலியாவில் நூற்றுக் கணக்கானோரின் தனிப்பட்ட தரவுகள் இணையத்தில் கசிந்துள்ளன.
அவை ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய சுகாதாரக் காப்புறுதி நிறுவனமான Medibankஇல் இருந்து களவாடப்பட்டுள்ளன.
வாடிக்கையாளரின் பெயர், முகவரி, பிறந்ததேதி, அரசாங்க அடையாள எண், மருத்துவ சிகிச்சை விவரங்கள், அவற்றுக்காகப் பெற்றுக்கொண்ட காப்புறுதித்தொகை என அனைத்துத் தகவல்களும் அதில் வெளியிடப்பட்டுள்ளன.
Medibank நிறுவனத்தைச் சேர்ந்த 9.7 மில்லியன் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவுகள் கடந்த மாதம் களவுபோயின. அந்த நிறுவனம் பிணைப்பணம் கொடுக்க மறுத்ததை அடுத்து, அத்தரவுகளின் மாதிரி இன்று வெளியானது.
இன்னும் அதிகமான தகவல்கள் வெளியிடப்படும் என அதனைக் களவாடிய கும்பல் எச்சரித்துள்ளது.
முக்கியமாக, 500,000 வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட மருத்துவத் தகவல்கள் களவுபோயிருப்பதாக நிறுவனம் தெரிவித்தது.
கடன்பற்று அட்டை அல்லது வங்கி விவரங்கள் எதுவும் கசியவில்லை என நிறுவனம் குறிப்பிட்டது.
நடந்த சம்பவத்திற்காக நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்புக் கேட்டது. பிரச்சினையைக் கையாள நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அது தெரிவித்தது.
ஏற்கெனெவே கடந்த செம்டெம்பர் மாதம் ஆஸ்திரேலியாவின் தொலைத்தொடர்பு நிறுவனமான Optusஇலும், சுமார் 10 மில்லியன் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவுகள் ஊடுருவப்பட்டன.