News ஆஸ்திரேலியாவில் மீண்டும் ஊடுருவல் - இணையத்தில் கசிந்த தரவுகள்

ஆஸ்திரேலியாவில் மீண்டும் ஊடுருவல் – இணையத்தில் கசிந்த தரவுகள்

-

ஆஸ்திரேலியாவில் நூற்றுக் கணக்கானோரின் தனிப்பட்ட தரவுகள் இணையத்தில் கசிந்துள்ளன.

அவை ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய சுகாதாரக் காப்புறுதி நிறுவனமான Medibankஇல் இருந்து களவாடப்பட்டுள்ளன.

வாடிக்கையாளரின் பெயர், முகவரி, பிறந்ததேதி, அரசாங்க அடையாள எண், மருத்துவ சிகிச்சை விவரங்கள், அவற்றுக்காகப் பெற்றுக்கொண்ட காப்புறுதித்தொகை என அனைத்துத் தகவல்களும் அதில் வெளியிடப்பட்டுள்ளன.

Medibank நிறுவனத்தைச் சேர்ந்த 9.7 மில்லியன் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவுகள் கடந்த மாதம் களவுபோயின. அந்த நிறுவனம் பிணைப்பணம் கொடுக்க மறுத்ததை அடுத்து, அத்தரவுகளின் மாதிரி இன்று வெளியானது.

இன்னும் அதிகமான தகவல்கள் வெளியிடப்படும் என அதனைக் களவாடிய கும்பல் எச்சரித்துள்ளது.

முக்கியமாக, 500,000 வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட மருத்துவத் தகவல்கள் களவுபோயிருப்பதாக நிறுவனம் தெரிவித்தது.

கடன்பற்று அட்டை அல்லது வங்கி விவரங்கள் எதுவும் கசியவில்லை என நிறுவனம் குறிப்பிட்டது.

நடந்த சம்பவத்திற்காக நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்புக் கேட்டது. பிரச்சினையைக் கையாள நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அது தெரிவித்தது.

ஏற்கெனெவே கடந்த செம்டெம்பர் மாதம் ஆஸ்திரேலியாவின் தொலைத்தொடர்பு நிறுவனமான Optusஇலும், சுமார் 10 மில்லியன் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவுகள் ஊடுருவப்பட்டன.

Latest news

இலங்கை உட்பட 22 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு ஆஸ்திரேலிய குடியுரிமை!

இலங்கை உட்பட உலகெங்கிலும் உள்ள 22 நாடுகளைச் சேர்ந்த 65 க்கும் மேற்பட்டவர்கள் ஆஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்றுள்ளனர்.

விக்டோரியாவில் தொழிலாளர் கட்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி

விக்டோரியா மாநிலத் தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சி சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளது. விக்டோரியா...

ஆஸ்திரேலியாவில் மலைப்பாம்பிடம் சிக்குண்ட சிறுவன் உயிர் பிழைத்த அதிசயம்!

ஆஸ்திரேலியாவின் Byron Bay மலைப்பாம்பிடம் சிக்குண்ட சிறுவன் உயிர் பிழைத்த அதிசய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியாவில் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறை – தொடரும் நெருக்கடி

ஆஸ்திரேலியாவில் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையை நீக்குவதற்கு நீண்ட காலம் எடுக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

சிட்னி ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

அடுத்த சில வாரங்களில் சிட்னி நகரில் ரயில்வே அமைப்பு தொடர்பான அனைத்து திட்டமிட்ட வேலைநிறுத்தங்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு ஆண்டும் 35,000 நிரந்தரக் குடியேறிகளை வரவேற்கத் திட்டம்

ஆஸ்திரேலியா ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக 35,000 நிரந்தரக் குடியேறிகளை வரவேற்கத் திட்டமிட்டுள்ளது. COVID-19...