Breaking Newsசிட்னி வந்த கப்பலில் 800 பேருக்கு கொவிட் - பாதியில் கைவிடப்பட்ட...

சிட்னி வந்த கப்பலில் 800 பேருக்கு கொவிட் – பாதியில் கைவிடப்பட்ட பயணம்

-

சிட்னி வந்த தி மஜெஸ்டிக் பிரின்சஸ் (The Majestic Princess) பயணக்கப்பலில் நூற்றுக்கணக்கான பயணிகளிடையே COVID-19 சம்பவங்கள் பதிவாயின.

அதன் காரணமாக 12 நாள் பயணத்தைப் பாதியில் கைவிட்டுக் கப்பல் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நிறுத்தப்பட்டது.

கப்பலில் 4,600 பயணிகளும் ஊழியர்களும் பயணம் சென்றுகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

3,300 பயணிகளைச் சோதித்ததில் சுமார் 800 பயணிகளுக்கும் சில ஊழியர்களுக்கும் கோவிட் நோய் ஏற்பட்டுள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

நோய்த்தொற்று ஏற்பட்ட பயணிகளுக்கு லேசான அறிகுறிகள் இருந்தன அல்லது அறவே அறிகுறிகள் இல்லை.

அவர்கள் கப்பலிலிருந்து வெளியேறி 5 நாள்களுக்குத் தனிமைப்படுத்துமாறு ஆலோசனை கொடுக்கப்பட்டது.

நோய்த்தொற்றினால் பாதிக்கப்படாதவர்கள் கப்பலைவிட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டார்கள்.

Latest news

நடந்து வரும் விலைப் போரில் Coles-இற்கு எதிராக Woolworths-இன் புதிய திட்டம்

ஆகஸ்ட் மாதத்தில் கூடுதலாக 100 தயாரிப்புகளுக்கு தள்ளுபடி வழங்கப்போவதாக Woolworths அறிவித்துள்ளது. இது சூப்பர் மார்க்கெட் போட்டியாளரான Coles-இற்கு எதிரான புதிய அடியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Pasta...

ஊழியர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கியதால் NAB $130 மில்லியன் இழப்பை சந்திக்கும்

NAB நிறுவனத்தின் ஊழியர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கப்படுவதாக ஒரு உள் மதிப்பாய்வு கண்டறிந்ததை அடுத்து, இந்த ஆண்டு அது $130 மில்லியன் இழப்பை சந்திக்கும். சம்பளப் பிரச்சினைகளை...

நவீன ஆற்றலுக்கு மாற திட்டமிட்டுள்ள விக்டோரியா

விக்டோரியன் அரசாங்கம் நவீன ஆற்றலுக்கு மாறுவதற்கான புதிய திட்டத்தை முன்வைத்துள்ளது. Gippsland கடல் மண்டலத்தில் கடல் காற்று விசையாழிகள் திட்டத்திற்கு சுமார் $7.9 பில்லியன் செலவாகும் என்று...

அட்லாண்டிக் வரலாற்றில் மிக வேகமாக தீவிரமடையும் புயல்களில் ஒன்றாக எரின் சூறாவளி

ஞாயிற்றுக்கிழமை காலை எரின் சூறாவளி 3வது வகை சூறாவளியாக தரமிறக்கப்பட்டதாக தேசிய சூறாவளி மையம் காலை 8 மணி புதுப்பிப்பில் (மாலை 6 மணி AEST)...