News 8 பில்லியனைத் தொட்டது உலக மக்கள் தொகை - இப்போது எங்கிருக்கிறார்கள்?

8 பில்லியனைத் தொட்டது உலக மக்கள் தொகை – இப்போது எங்கிருக்கிறார்கள்?

-

உலக மக்கள்தொகை இன்று 8 பில்லியனைத் தொட்டுவிட்டது என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்பு அது 7 பில்லியனை எட்டியிருந்தது.

உலக மக்கள்தொகை 9 பில்லியனை எட்ட இன்னும் 15 ஆண்டுகள் எடுக்கக்கூடும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் குறிப்பிட்டது. அது 2080ஆம் ஆண்டுக்கு முன்பு 10 பில்லியனை எட்டும் சாத்தியம் இல்லை என்று நிறுவனம் கருதுகிறது.

5 பில்லியனாவது, 6 பில்லியனாவது, 7 பில்லியனாவது பிள்ளைகள் என்ன செய்கிறார்கள்?

உலக மக்கள்தொகை அந்த எண்ணிக்கையை எட்டும்போது அதைப் பிரதிபலிக்க நிறுவனம் ஒரு குழந்தையைத் தேர்ந்தெடுத்திருக்கிறது.

5 பில்லியனாவது குழந்தை…

1987ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி மாதேஜ் காஸ்பர் (Matej Gaspar) இப்போதைய குரோஷியாவின் தலைநகர் ஸாக்ரெபில் பிறந்தார்.

இந்த ஆண்டு அவருக்கு 35 வயது. அவர் ஸாக்ரெப் நகரில் வாழ்ந்துகொண்டிருப்பதாக BBC செய்தி நிறுவனம் கூறியது.

6 பில்லியனாவது குழந்தை…

1999ஆம் ஆண்டு அட்னான் மெவிச் (Adnan Mevic) போஸ்னியா – ஹெர்ஸகோவினாவில் பிறந்தார்.

அவருக்கு இப்போது 23 வயது.

23 ஆண்டுகளில் உலக மக்கள்தொகை 2 பில்லியன் அதிகரித்துவிட்டது என்று அவர் வியப்படைந்தார்.

இந்த அழகிய பூமி எப்படித் தாக்குப்பிடிக்கப் போகிறது என்பது தெரியவில்லை என்று அவர் BBCயிடம் கூறினார்.

Latest news

6 ஆண்டுகளாக ஊழியர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கியதற்காக UNSW க்கு எதிரான விசாரணை

ஃபேர்வொர்க் ஒம்புட்ஸ்மேன் அலுவலகம், நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் அல்லது யுஎன்எஸ்டபிள்யூ, ஊதியம் வழங்கப்படாத குற்றச்சாட்டுகளுக்கு எதிராக விசாரணையைத் தொடங்கியுள்ளது.

BREAKING: டேனியல் ஆண்ட்ரூஸ் விக்டோரியாவின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்

விக்டோரியாவின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய டேனியல் ஆண்ட்ரூஸ் முடிவு செய்துள்ளார். இதன்படி, நாளை பிற்பகல் 05.00 மணி...

விக்டோரியர்கள் செலுத்த வேண்டிய மீதமுள்ள அபராதம் $850 மில்லியன்

விக்டோரியர்கள் செலுத்த வேண்டிய அபராதத் தொகை 850 மில்லியன் டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் $353 மில்லியன் அதிவேகத்துடன்...

உலகிலேயே தூய்மையான காற்று இங்கு மட்டுமே கிடைக்கும்!

சுத்தமான காற்று, நல்ல குடிநீர், ஆரோக்கியமான உணவு மற்றும் வசிப்பதற்கு இருப்பிடம் ஆகியவைதான் மனிதனின் முதல் தேவைகள் ஆகும்.

உலகிலேயே தூய்மையான காற்று இங்கு மட்டுமே கிடைக்கும்!

சுத்தமான காற்று, நல்ல குடிநீர், ஆரோக்கியமான உணவு மற்றும் வசிப்பதற்கு இருப்பிடம் ஆகியவைதான் மனிதனின் முதல் தேவைகள் ஆகும்.

வகுப்பறைக்குள் அரசியலை கொண்டு வந்ததாக 2 விக்டோரியா பாடசாலைகளுக்கு எதிராக முறைப்பாடுகள்

சுதேசி குரல் வாக்கெடுப்பு தொடர்பில் வகுப்பறைகளுக்குள் அரசியலை கொண்டு வந்தமைக்காக விக்டோரியா மாநிலத்தில் உள்ள 02 பாடசாலைகளுக்கு எதிராக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.