Newsஆஸ்திரேலியா விசா விண்ணப்பதாரர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

ஆஸ்திரேலியா விசா விண்ணப்பதாரர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

-

ஆஸ்திரேலியாவில் குவிந்து கிடக்கும் விசா விண்ணப்பங்களின் எண்ணிக்கை 755,000 ஆகக் குறைந்துள்ளது.

இது ஒரு கட்டத்தில் 10 இலட்சத்தை தாண்டியிருந்ததுடன், ஜூன் 01 ஆம் திகதி முதல் 30 இலட்சத்திற்கும் அதிகமான விசா விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு விவகார அமைச்சர் அன்ட்ரூ கில்ஸ் தெரிவித்துள்ளார்.

விசா விண்ணப்பங்களை பரிசீலிக்க கிட்டத்தட்ட 300 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வருட இறுதிக்குள் குவியும் விசா விண்ணப்பங்களின் எண்ணிக்கையை 600,000 ஆக குறைப்பது அரசாங்கத்தின் திட்டமாகும் என குடிவரவு குடியகல்வு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த வரவு செலவுத் திட்டத்தில் இலங்கையில் விசா விண்ணப்பங்களை பரிசீலிப்பதற்காக 36.1 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டது.

விசா விண்ணப்பங்களின் நிலுவையை விரைவாகச் செயல்படுத்த 9 மாதங்களுக்குள் ஊழியர்களின் எண்ணிக்கையை 500 ஆக அதிகரிப்பது இதில் அடங்கும்.

2015-16 ஆம் ஆண்டில் திறமையான விசா விண்ணப்பங்களுக்கான சராசரி செயலாக்க நேரம் நான்கு மாதங்களாக இருந்ததாகவும், ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒரு மாதமாக அதிகரித்து 2018-19 ஆம் ஆண்டில் ஏழு மாதங்களாக அதிகரித்துள்ளதாகவும் குடிவரவு அமைச்சர் ஆண்ட்ரூ கில்ஸ் தெரிவித்தார்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...