Melbourneமெல்பேர்ணுக்கு விமானம் மூலம் வந்த மூவருக்கு தட்டம்மை!

மெல்பேர்ணுக்கு விமானம் மூலம் வந்த மூவருக்கு தட்டம்மை!

-

சிங்கப்பூரிலிருந்து மெல்பேர்ண் நகருக்குத் திரும்பிய 3 பயணிகளுக்குத் தட்டம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் கடந்த திங்கட்கிழமை (14 நவம்பர்) Qantas விமானம் QF36இல் பயணம் செய்ததாக விக்டோரியா மாநிலத்தின் சுகாதார அமைச்சு தெரிவித்தது

பாதிக்கப்பட்ட மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இருவருக்குத் தட்டம்மை இருந்தது பயணத்தின்போதே தெரிய வந்தது என்றும் அவர்கள் உடனடியாக மருத்துவரை நாடினர் என்றும் அமைச்சு கூறியது.

பாதிக்கப்பட்டவர்கள் பயணம் செய்த விமானமும் மெல்பேர்ண் விமான நிலையமும் நோய் பரவக்கூடிய தளங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

QF36 விமானத்தில் பயணம் செய்தவர்கள், நவம்பர் 15ஆம் திகதி காலை 6:10 மணி முதல் 8:40 மணி வரை மெல்பேர்ண் விமான நிலையத்தின் அனைத்துலக வருகைப் பகுதியில் இருந்தவர்கள் ஆகியோர் டிசம்பர் 3ஆம் திகதி வரை தங்கள் உடல்நலத்தைக் கண்காணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

தட்டம்மை நெருங்கிய தொடர்பில் எளிதில் பரவக்கூடியது. குறிப்பாகத் தட்டம்மைக்கு எதிராகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கிடையே அது அதிகமாகப் பரவும் என்று தெரிவிக்கப்பட்டது.

சிறுவர்களுக்கும் பலவீனமான நோய் எதிர்ப்புச் சக்திகொண்ட பெரியவர்களுக்கும் தட்டம்மை ஏற்படும் அபாயம் அதிகம்.

இவ்வாண்டு விக்டோரியாவில் 5 தட்டம்மைச் சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன.

Latest news

வெனிசுலாவில் பெப்ரவரி 3 ஆம் திகதி வரை இலவச இணையசேவை

வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள அதிரடி அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், அந்நாட்டு மக்களுக்கு இலவச இணைய சேவையை வழங்குவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க...

மின்சார வாகன சந்தையில் தனது கிரீடத்தை இழக்கும் Tesla

பல ஆண்டுகளாக உலகின் முன்னணி மின்சார வாகன உற்பத்தியாளராக இருந்த எலான் மஸ்க்கின் Tesla, தனது இடத்தை இழந்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் சாதனை விற்பனையை எட்டிய...

வெனிசுலா மீதான டிரம்பின் தாக்குதல்கள் குறித்து உலகத் தலைவர்கள் கூறுவது என்ன?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவி சிலியா புளோரஸையும் கைது செய்த பிறகு உலகத் தலைவர்கள் வெவ்வேறு வழிகளில்...

குழந்தைகளைப் பாதுகாக்க குயின்ஸ்லாந்து அரசின் புதிய சட்டம்

குயின்ஸ்லாந்துவாசிகள் மற்றும் அவர்களது குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்துடன், 'டேனியல் சட்டத்தின்' (Daniel’s Law) கீழ், தண்டனை பெற்ற குழந்தை பாலியல் குற்றவாளிகள் பற்றிய...

திருமணம் செய்தார் பெர்த் கால்பந்து சூப்பர் ஸ்டார்

பெர்த் கால்பந்து சூப்பர் ஸ்டார் சாம் கெர் மற்றும் அவரது புதிய மனைவி கிறிஸ்டி மெவிஸ் ஆகியோர் தங்கள் திருமணத்தின் முதல் அதிகாரப்பூர்வ புகைப்படங்களை சமூக...

மின்சார வாகன சந்தையில் தனது கிரீடத்தை இழக்கும் Tesla

பல ஆண்டுகளாக உலகின் முன்னணி மின்சார வாகன உற்பத்தியாளராக இருந்த எலான் மஸ்க்கின் Tesla, தனது இடத்தை இழந்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் சாதனை விற்பனையை எட்டிய...