News ஆஸ்திரேலியாவில், 15 ஆண்டுகளில் 31 பெண்களுக்கு நேர்ந்த கதி - 40...

ஆஸ்திரேலியாவில், 15 ஆண்டுகளில் 31 பெண்களுக்கு நேர்ந்த கதி – 40 வருடங்களின் பின் சிக்கிய குற்றவாளி

-

ஆஸ்திரேலியாவில், 15 ஆண்டுகளில் 31 பெண்களைக் குறிவைத்து பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியை, 40 ஆண்டுகளுக்குப் பிறகு பொலிஸார் கண்டுபிடித்திருக்கின்றனர்.

இந்தச் சம்பவம் 1985 – 2001 வரையிலான 15 ஆண்டுகளில் நடந்திருக்கிறது. ஆரம்பகால விசாரணையில், முதலில் பல்வேறு நபர்கள் இதில் ஈடுபட்டிருப்பதாக நம்பப்பட்டது.

பின்னர் ஒருவழியாக டி.என்.ஏ சோதனை மூலம், இதைச் செய்தவர் கீத் சிம்ஸ் என்பது தெரியவந்திருக்கிறது. ஆரம்பத்தில் இந்தக் குற்றங்கள் தனித்தனியாக விசாரிக்கப்பட்டாலும் கூட 2001-ம் ஆண்டு, 12 பாதிக்கப்பட்ட நபர்களின் டி.என்.ஏ சோதனை முடிவுகள் ஒரே மாதிரியானது என்பது கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, மற்ற 19 சம்பவங்களையும் பொலிஸார் இதனுடன் இணைத்தனர்.

இதில் பாதிக்கப்பட்டவர்கள் 14 – 55 வயதுடையவர்கள் என்று கூறப்படுகிறது. பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அந்த நபரைப்பற்றி, 160 – 180 செ.மீ உயரம் கொண்டவர், கருமையான நிறமுடையவர், பழுப்பு நிற கண்கள், அகன்ற மூக்கு கொண்டவர் என்று ஒத்த விளக்கங்களைக் கூறியிருக்கின்றனர்.

அதைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டின் தொடக்கத்தில் புலனாய்வாளர்கள், பொலிஸாரின் தரவுத்தளத்தில் இது தொடர்பான டி.என்.ஏ பொருத்தத்தைக் கண்டுபிடித்தனர். இது சந்தேகத்துக்குரிய எண்ணிக்கையை 324 பேராகக் குறைத்தது. அதையடுத்து ஒருவழியாகக் கடந்த செப்டம்பரில், சிம்ஸிடமிருந்து ஏற்கெனவே இருந்து எடுக்கப்பட்டிருந்த டி.என்.ஏ மாதிரி, பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து எடுக்கப்பட்டவற்றுடன் சரியான பொருத்தமாக இருப்பது கண்டறியப்பட்டது.

கீத் சிம்ஸ் தான் குற்றவாளி என்று கண்டுபிடிக்கப்பட்டாலும், இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதமே இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் சிம்ஸ், மிகவும் விரும்பத்தகுந்த தந்தை, தாத்தா மற்றும் சமூக உறுப்பினர் என குடும்ப மற்றும் நண்பர்கள் வட்டாரம் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Latest news

ஆபத்தான வைரஸ் பற்றி NSW குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை

நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் முழுவதும் ஆபத்தான வைரஸ் பரவி வருகிறது. உள்ளிழுத்தல் மற்றும் வெளியேற்றம் மூலம் பரவும்...

பல குயின்ஸ்லாந்து பிராந்தியங்களில் பெட்ரோல் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது

பிரிஸ்பேன் உட்பட குயின்ஸ்லாந்தின் பல பகுதிகளில் பெட்ரோல் விலை வரலாறு காணாத மதிப்பை பதிவு செய்துள்ளது. ஒரு லீற்றர்...

ஆஸ்திரேலியாவில் பணவீக்கம் மீண்டும் 5.2% உயர்வு

அவுஸ்திரேலியாவில் 04 மாதங்களாக குறைந்திருந்த பணவீக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது. புள்ளிவிபரப் பணியகம் இன்று வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, ஆகஸ்ட்...

விக்டோரியாவின் பிரீமியர் பதவிக்கு கடுமையான போராட்டம் – ஜெசிந்தா ஆலன் முன்னிலையில்

இன்று மாலை 5.00 மணிக்குப் பின்னர் காலியாகவுள்ள விக்டோரியா பிரீமியர் பதவிக்கு விக்டோரியா தொழிலாளர் கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு இடையே கடும் மோதல்...

குயின்ஸ்லாந்து Go Card வைத்திருப்பவர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

குயின்ஸ்லாந்தின் பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கான புதிய ஸ்மார்ட் டிக்கெட் முறையை அறிமுகப்படுத்துவதற்கு முன், GO கார்டு பயனர்கள் தங்கள் நிலுவைகளை திரும்பப் பெறுமாறு...

மேற்கு ஆஸ்திரேலியா போலீஸ் சேவைக்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்களுக்கு விசா பெறுவதில் உள்ள சிரமங்கள்

மேற்கு அவுஸ்திரேலியாவில் பொலிஸ் சேவைக்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்கள் விசா பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரியவந்துள்ளது. புதிய ஆட்சேர்ப்பின் கீழ்,...