Newsஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு ஆண்டும் 35,000 நிரந்தரக் குடியேறிகளை வரவேற்கத் திட்டம்

ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு ஆண்டும் 35,000 நிரந்தரக் குடியேறிகளை வரவேற்கத் திட்டம்

-

ஆஸ்திரேலியா ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக 35,000 நிரந்தரக் குடியேறிகளை வரவேற்கத் திட்டமிட்டுள்ளது.

COVID-19 நோய்த்தொற்றின்போது தற்காலிக விசா வைத்திருந்தவர்கள் பலர் நாட்டிலிருந்து வெளியேறினர்.

அதைத் தொடர்ந்து பல நிறுவனங்கள் ஊழியர்களைத் தேடச் சிரமப்படுகின்றன.

உணவகங்கள், மதுபானக் கூடங்கள், ஹோட்டல்கள் ஆகியவை அதிக அளவில் பாதிப்படைந்துள்ளன. குறிப்பாக அந்நாட்டின் உபசரிப்புத் துறையில் வெளிநாட்டு ஊழியர்கள் தேவைப்படுகின்றனர்.

விசா நடைமுறையை விரிவுபடுத்த அரசாங்கம் முயற்சி செய்துவந்தாலும் பாதிக்கப்பட்ட வேலையிடங்கள் மீண்டு வருவதற்குப் பல மாதங்கள் அல்லது வருடங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.

மாணவர்கள், சுற்றுப்பயணிகள், வேலை அனுமதி விசா வைத்திருப்பவர்கள் ஆகியோர் அதிக எண்ணிக்கையில் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்புகின்றனர்.

ஆனால் அவர்களின் வருகை நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்குச் சில காலம் ஆகும் என்று கூறப்படுகிறது.

Latest news

ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிராக உக்ரைனுக்கு நிவாரணம் வழங்கும் ஆஸ்திரேலியா

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், உக்ரைன் பொருட்களுக்கு வரிச் சலுகைகளை நீட்டிக்க ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது. பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் இன்று...

70 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு

70 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே ஆஸ்திரேலிய வானில் தோன்றும் அபூர்வ டெவில் வால் நட்சத்திரம் இன்னும் சில நாட்களில் தோன்ற உள்ளது. டிராகன்களின் தாய் என்றும் அழைக்கப்படும்...

மூழ்கி வரும் சீனாவின் பல முக்கிய நகரங்கள்

சீனாவின் முக்கிய நகரங்களில் சுமார் 270 மில்லியன் மக்கள் மூழ்கும் நிலத்தில் வாழ்கின்றனர் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. மனித செயல்பாடு சீனாவின் முக்கிய நகரங்களில்...

ஆஸ்திரேலியாவில் உள்ள மனநல மருத்துவர்களின் வேண்டுகோள்

மனநல சேவை நிபுணர் பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு தலையிட வேண்டும் என மனநல மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த மாதம், 500க்கும் மேற்பட்ட மனநல மருத்துவர்கள்,...

மூழ்கி வரும் சீனாவின் பல முக்கிய நகரங்கள்

சீனாவின் முக்கிய நகரங்களில் சுமார் 270 மில்லியன் மக்கள் மூழ்கும் நிலத்தில் வாழ்கின்றனர் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. மனித செயல்பாடு சீனாவின் முக்கிய நகரங்களில்...

தேவாலயத்தில் கத்திக்குத்து தாக்குதலில் கைதான சிறுவனின் வாக்குமூலம்

சிட்னி தேவாலயத்தில் பிஷப் ஒருவரை கத்தியால் குத்திய சம்பவம் பயங்கரவாதச் செயலாகக் கருதி விசாரணை நடத்தி வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். பயங்கரவாத தடுப்பு அதிகாரிகள் நேற்று மதியம்...