தொழிலாளர் கட்சி அரசாங்கத்தின் முக்கிய தேர்தல் வாக்குறுதியாக இருந்த தொழிலாளர் உறவுகள் சட்டம் இந்த வாரம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட உள்ளது.
இந்த மசோதாவின் சிறப்பு அம்சங்களில், குறைந்த ஊதியம் பெறுபவர்கள் அதிக ஊதியம் பெறுவதற்கான திறனை அதிகரித்தல் மற்றும் அதற்காக முதலாளிகளுடன் ஒப்பந்தங்களுக்கு வருவதில் அதிக அதிகாரங்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு சலுகைகள் போன்றவைகள் உள்ளடங்குகின்றது.
இதற்கு, நிறுவன உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து, வேலை நிறுத்தம் அதிகரிக்கும் என, கணித்துள்ளனர்.
இதற்கு செனட் சபையில் பசுமைக் கட்சி எம்.பி.க்கள் மற்றும் பல எதிர்க்கட்சியான லிபரல் கட்சி எம்.பி.க்கள் ஆதரவு தெரிவிப்பார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.