Breaking Newsதடைசெய்யப்பட்ட உணவுப்பொருட்களை நாட்டிற்குள் கொண்டுவந்தால் $4440 அபராதம்!

தடைசெய்யப்பட்ட உணவுப்பொருட்களை நாட்டிற்குள் கொண்டுவந்தால் $4440 அபராதம்!

-

ஆஸ்திரேலியாவின் Biosecurity Act 2015 -உயிரியல் பாதுகாப்பு சட்டம் 2015 திருத்தியமைக்கப்பட்டுள்ளதுடன் இச் சட்டத்தை மீறுபவர்களுக்கான அபராதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த திருத்தங்கள், Biosecurity அச்சுறுத்தல்கள் தொடர்பில் விரைவாக செயல்படுவதற்கு அரசிற்கு உதவும்.

இந்த புதிய சட்டத்திருத்தத்தின்கீழ், தடைசெய்யப்பட்ட உணவுப்பொருட்கள் உட்பட, உயிரியல் பாதுகாப்பு அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய பொருட்களை திருட்டுத்தனமாக ஆஸ்திரேலியாவிற்குள் எடுத்துவருபவர்கள் மற்றும் அவற்றை பிரகடனம் செய்யத்தவறுபவர்களுக்கான on the spot அபராதம், 4440 டொலர்கள் வரை அதிகரிக்கப்படுகிறது.

மிகக் கடுமையான விதிமீறல்களைச் செய்வோர் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டு 266,400 டொலர்கள் வரை அபராதம் விதிக்கப்படக் கூடும்.

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துவரும் Biosecurity அச்சுறுத்தல்களுக்கு ஏற்ப அபராதங்களும் மாற்றியமைக்கப்படுவதாக, வேளாண்மை, மீன்வள மற்றும் வனவியல் அமைச்சர் Murray Watt தெரிவித்தார்.

“புதிய நடவடிக்கைகள் ஆஸ்திரேலியாவின் உயிர் பாதுகாப்பு முறையை வலுப்படுத்தவும், 70.3 பில்லியன் டொலர் மதிப்புள்ள விவசாய ஏற்றுமதி தொழில்களைப் பாதுகாக்கவும், விவசாய விநியோகச் சங்கிலி முழுவதும் உள்ள 1.6 மில்லியன் வேலைகளைப் பாதுகாக்கவும், நமது வாழ்க்கை முறையைப் பாதுகாக்கவும் உதவும்” என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

“புதிய சட்டத்திருத்தத்தின்படி ஆஸ்திரேலியாவுக்குள் கொண்டுவருவதற்கு தடைவிதிக்கப்பட்ட பொருட்களை திருட்டுத்தனமாக எடுத்துவருபவர்கள் மற்றும் பிரகடனப்பத்திரத்தில் பொய்யான தகவல்களை குறிப்பிடுபவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு அந்த இடத்தில்வைத்து 4440 டொலர்கள் அபராதம் விதிக்கப்படும் – இது முன்னர் விதிக்கப்பட்டதை விட கிட்டத்தட்ட 2000 டொலர்கள் அதிகமாகும்” எனவும் அமைச்சர் Murray Watt தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவின் உயிரியல் பாதுகாப்பு சட்டங்களின்கீழ் சில பொருட்களை நாட்டுக்குள் எடுத்துவரமுடியாது. அவ்வாறான பொருட்கள் எமக்கு சாதாரணமாகத் தெரியலாம். ஆனால் சுற்றுச்சூழல் மற்றும் விவசாயத்துறைக்கு அவை பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

Agriculture.gov.au என்ற இணையத்தளத்தில் ஆஸ்திரேலியாவிற்குள் என்னென்ன பொருட்களைக் கொண்டுவரலாம் என்னென்ன பொருட்களைக் கொண்டுவர முடியாது என்ற விவரங்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

வெளிநாட்டில் இருந்து வரும்போது அனைத்து பயணிகளும் Incoming Passenger Card-ஐ பூர்த்தி செய்ய வேண்டும். உணவுப் பொருட்கள், விலங்குகள் மற்றும் தாவரங்கள் தொடர்பான பொருட்கள் போன்ற உயிரியல் பாதுகாப்பு அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய பொருட்களை declare- பிரகடனப்படுத்த வேண்டும்.

Biosecurity அதிகாரிகள் நீங்கள் பிரகடனம் செய்த பொருட்களை நாட்டுக்குள் அனுமதிக்க முடியுமா இல்லையா என்பதை ஆய்வுசெய்து முடிவெடுப்பார்கள்.

ஆபத்தான தடைசெய்யப்பட்ட பொருட்களை எடுத்துவருபவர்கள் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைவதற்கான அனுமதிகூட சிலவேளைகளில் மறுக்கப்படலாம்.

Foot and Mouth நோய்ப்பரவல் உள்ளிடவற்றின் காரணமாக ஆஸ்திரேலியா தனது Biosecurity பாதுகாப்பை தொடர்ச்சியாக வலுப்படுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest news

எதிர்காலத்தில் பணவீக்கக் குறைப்பு எவ்வாறு நிகழும் என்பதை விளக்கும் நிபுணர்

அடுத்த சில மாதங்களில் NAB பல வட்டி விகிதக் குறைப்புகளைத் திட்டமிட்டுள்ளது. இது வீட்டு உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கத்துடன் உள்ளது. Big 4 இன் தலைமைப் பொருளாதார...

மூன்று நாட்களுக்கு விளக்குகளை அணைக்கப்போகும் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவின் மிகவும் பிரபலமான விடுமுறை தீவுக்குச் செல்லும் பாலத்தின் ஓரத்தில் உள்ள விளக்குகள் மூன்று நாட்களாக அணைந்து போயுள்ளன. புலம்பெயர்ந்த பறவைகளுக்கு ஏற்படும் சிரமத்தைத் தடுக்கவே இந்த...

Online Dating வலைத்தளங்களைப் பார்வையிடுபவர்களுக்கு எச்சரிக்கை

Online Dating வலைத்தளங்களில் மோசடி செய்பவர்கள் குறித்த புகார்கள் அதிகரித்துள்ளதாக ஆஸ்திரேலிய தேசிய மோசடி எதிர்ப்பு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும், ஆஸ்திரேலியர்கள் இதுபோன்ற மோசடியால்...

பல் மருத்துவ சேவைகளை மருத்துவ காப்பீட்டில் சேர்க்க வேண்டுமா?

பல் மருத்துவ சேவைகளை உள்ளடக்கியதாக Medicare-ஐ மேலும் விரிவுபடுத்துவதற்கான ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இது ஆஸ்திரேலிய பல் மருத்துவ நிபுணர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேரின் ஆதரவைப்...

திரும்ப அழைக்கப்பட்டுள்ள Fisher Price Toy

இளம் குழந்தைகளுக்கு ஏற்றது என விளம்பரப்படுத்தப்பட்ட Fisher Price Toy திரும்பப் பெறப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதி பிரிந்து மூச்சுத் திணறல் மற்றும் காயங்களை ஏற்படுத்தக்கூடும் என்று...

கட்டாயமாக்கப்பட்டுள்ள “தளபாட பாதுகாப்பு தகவல் பட்டியல்”

ஆஸ்திரேலிய நுகர்வோர் சட்ட அமலாக்க நிறுவனம், மே 4 முதல் விற்பனையில் உள்ள தளபாடங்கள் பொருட்களை நுகர்வோருக்கு வழங்குவதை கட்டாயமாக்கியுள்ளது. தளபாடங்கள் இடிந்து விழும் அபாயங்கள் குறித்து...