Sportsபங்களாதேஷ் அணியிடம் போராடி தோற்ற இந்தியா - இரண்டாவது போட்டியிலும் தோல்வி!

பங்களாதேஷ் அணியிடம் போராடி தோற்ற இந்தியா – இரண்டாவது போட்டியிலும் தோல்வி!

-

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி 5 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

அதற்கமைய, அந்த அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 271 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பாக மஹிடி ஹாசன் ஆட்டமிழக்காமல் 100 ஓட்டங்களையும் மஹமதுல்லா 77 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இதனையடுத்து, 272 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 50 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 266 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

இந்திய அணி சார்பாக ஸ்ரேயாஸ் ஐயர் 82 ஓட்டங்களையும், இறுதி நேரத்தில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய ரோஹித் சர்மா 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

அதற்கமைய, 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் 1 போட்டி மீதமிருக்க பங்களாதேஷ் அணி 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

– நன்றி தமிழன்.lk –

Latest news

விக்டோரியாவில் தேர்வுகள் தொடர்பில் மாநில அரசு விடுத்துள்ள உத்தரவு

விக்டோரியாவில் உள்ள பள்ளிகளில் 12 ஆம் ஆண்டு தேர்வுகளை மேற்பார்வையிடும் அமைப்பை மறுஆய்வு செய்ய மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. பரீட்சை தொடர்பான சில மாணவர்களுக்கு இணையத்தில் மாதிரி...

விக்டோரியா பிரதமரின் தலைமைத்துவம் பற்றி எழுந்துள்ள கேள்வி

விக்டோரியா பிரதமர் ஜெசிந்தா ஆலன் தலைமையில் மாநில அரசு பிளவுபட்டுள்ளதாக விக்டோரியா எதிர்க்கட்சித் தலைவர் ஜான் பெசுடோ தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் பேசிய அவர், தொழிலாளர் கட்சி எம்.பி.க்கள்...

NSW போக்குவரத்து அபராத முறையில் ஏற்படவுள்ள மாற்றம்

நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு டிக்கெட் இல்லாமல் பார்க்கிங் அபராதம் விதிக்க தடை விதித்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த அபராத முறையின்...

ஒவ்வொரு 10 நாட்களுக்கும் இலங்கை செல்லும் 5 ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள்

நவம்பர் மாதம் முதல் 10 நாட்களில் 61 ஆயிரத்து 767 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி நவம்பர் மாதம் முதல் 10 நாட்களில் ஒரு...

ஒவ்வொரு 10 நாட்களுக்கும் இலங்கை செல்லும் 5 ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள்

நவம்பர் மாதம் முதல் 10 நாட்களில் 61 ஆயிரத்து 767 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி நவம்பர் மாதம் முதல் 10 நாட்களில் ஒரு...

உலகின் மிகப்பெரிய பவளப்பாறை கண்டுபிடிப்பு

தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் உலகின் மிகப்பெரிய பவளப்பாறையை கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் குழு வெற்றி பெற்றுள்ளது. இது 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாகவும், நீல திமிங்கலத்தை விட பெரியதாகவும்...