Sportsபங்களாதேஷ் அணியிடம் போராடி தோற்ற இந்தியா - இரண்டாவது போட்டியிலும் தோல்வி!

பங்களாதேஷ் அணியிடம் போராடி தோற்ற இந்தியா – இரண்டாவது போட்டியிலும் தோல்வி!

-

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி 5 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

அதற்கமைய, அந்த அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 271 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பாக மஹிடி ஹாசன் ஆட்டமிழக்காமல் 100 ஓட்டங்களையும் மஹமதுல்லா 77 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இதனையடுத்து, 272 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 50 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 266 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

இந்திய அணி சார்பாக ஸ்ரேயாஸ் ஐயர் 82 ஓட்டங்களையும், இறுதி நேரத்தில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய ரோஹித் சர்மா 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

அதற்கமைய, 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் 1 போட்டி மீதமிருக்க பங்களாதேஷ் அணி 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

– நன்றி தமிழன்.lk –

Latest news

இரண்டு ஹெலிகாப்டர்கள் வானில் மோதி பயங்கர விபத்து

மலேசியாவில் இரண்டு கடற்படை ஹெலிகாப்டர்கள் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று காலை லுமுட்டில் ரோயல் மலேசியன் நேவியின் பயிற்சியின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள்...

நியூ சவுத் வேல்ஸில் பிரச்சனையாக உருவெடுத்துள்ள காட்டுப் பன்றிகள்

நியூ சவுத் வேல்ஸில் காட்டுப்பன்றிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அதிக நிதியுதவி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 13 மில்லியன் டாலர் கட்டுப்பாட்டு திட்டத்தின் ஒரு...

வாடிக்கையாளர்களிடமிருந்து சூப்பர் மார்க்கெட் தொழிலாளர்களைப் பாதுகாக்க ஒரு புதிய திட்டம்

நியூசிலாந்தின் Woolworths பல்பொருள் அங்காடி ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து வரும் வன்முறைச் செயல்களில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள பாடி கேமராக்களை அணியும் புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இந்த...

வேகமாக வெப்பமடையும் ஐரோப்பா கண்டம்

உலகில் ஐரோப்பா மிக வேகமாக வெப்பமடையும் கண்டமாக மாறிவருவதாக ஐ.நா.வின் உலக வானிலை மையம் (WMO) மற்றும் ஐரோப்பிய யூனியனில் காலநிலை முகமை இணைந்து வெளியிட்ட...