Sportsஅரையிறுதிக்குள் நுழைந்த நான்கு அணிகள் தொடர்பான விபரங்கள் - FIFA உலகக்கிண்ணம்

அரையிறுதிக்குள் நுழைந்த நான்கு அணிகள் தொடர்பான விபரங்கள் – FIFA உலகக்கிண்ணம்

-

FIFA உலகக்கிண்ண காற்பந்து தொடரின் அரையிறுதிக்கு ஆர்ஜென்டினா, குரோஷியா, மொரோக்கோ மற்றும் பிரான்ஸ் ஆகிய அணிகள் முன்னேறியுள்ளன.

இந்நிலையில், உலகக்கிண்ண காற்பந்து தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டியில் ஆர்ஜென்டினா அணி குரோஷியாவை எதிர்கொள்கிறது.

இதனைத் தொடர்ந்து டிசம்பர் 15ஆம் திகதி இடம்பெறவுள்ள மற்றுமொரு அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை மொரோக்கோ அணி எதிர்கொள்கிறது.

இந்த இரு போட்டிகளில் வெற்றிபெறும் அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இம்முறை உலகக்கிண்ண காற்பந்து தொடரில் அரையிறுதிக்கு முன்னேறிய முதலாவது ஆபிரிக்க நாடாக மொரோக்கோ பதிவாகியுள்ளது. பலம்வாய்ந்த போர்த்துக்கல் அணியை வீழ்த்தியே அவ்வணி இம்முறை அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.

மேலும், கடந்த 2018ஆம் ஆண்டு இறுதிப்போட்டியில் விளையாடிய பிரான்ஸ் மற்றும் குரோஷிய அணிகள் இம்முறை அரையிறுதிக்கு முன்னேறியுள்ள நிலையில், மீண்டும் இதே கூட்டணி இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்துமா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

1986ஆம் ஆண்டுக்கு பின்னர் உலகக்கிண்ணத்தை தொட்டுப்பார்க்காத ஆர்ஜென்டினா அணி கடந்த 2014ஆம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில், ஜேர்மனியிடம் தோல்வியுற்றதோடு, உலகக்கிண்ண கனவாக மீண்டும் காத்திருப்பு பட்டியலுக்குள் நுழைந்திருந்தது.

எனவே, இம்முறை மேற்படி நான்கு அணிகளும் பல்வேறு சூழ்நிலைகளுக்கு முகங்கொடுத்து அரையிறுதிக்குள் நுழைந்துள்ளமையால், கிண்ணத்தை சுவீகரிக்கும் அணி எதுவாக இருக்கலாம் என்ற கேள்விக்கு பொறுத்திருந்து பார்ப்பது மட்டுமே பதிலாக இருக்கிறது.

நன்றி தமிழன்

Latest news

விக்டோரியா பிரதமரின் தலைமைத்துவம் பற்றி எழுந்துள்ள கேள்வி

விக்டோரியா பிரதமர் ஜெசிந்தா ஆலன் தலைமையில் மாநில அரசு பிளவுபட்டுள்ளதாக விக்டோரியா எதிர்க்கட்சித் தலைவர் ஜான் பெசுடோ தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் பேசிய அவர், தொழிலாளர் கட்சி எம்.பி.க்கள்...

NSW போக்குவரத்து அபராத முறையில் ஏற்படவுள்ள மாற்றம்

நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு டிக்கெட் இல்லாமல் பார்க்கிங் அபராதம் விதிக்க தடை விதித்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த அபராத முறையின்...

ஒவ்வொரு 10 நாட்களுக்கும் இலங்கை செல்லும் 5 ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள்

நவம்பர் மாதம் முதல் 10 நாட்களில் 61 ஆயிரத்து 767 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி நவம்பர் மாதம் முதல் 10 நாட்களில் ஒரு...

உலகின் மிகப்பெரிய பவளப்பாறை கண்டுபிடிப்பு

தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் உலகின் மிகப்பெரிய பவளப்பாறையை கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் குழு வெற்றி பெற்றுள்ளது. இது 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாகவும், நீல திமிங்கலத்தை விட பெரியதாகவும்...

உலகின் மிகப்பெரிய பவளப்பாறை கண்டுபிடிப்பு

தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் உலகின் மிகப்பெரிய பவளப்பாறையை கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் குழு வெற்றி பெற்றுள்ளது. இது 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாகவும், நீல திமிங்கலத்தை விட பெரியதாகவும்...

பியர் குடித்து தனது 110வது பிறந்தநாளை கொண்டாடிய பாட்டி

தனது 110வது பிறந்தநாளை கொண்டாடிய பெர்த் பாட்டி ஒருவர் தனது நீண்ட ஆயுளின் ரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளார். பிரிட்ஜெட் க்ரோக் என்ற பெண் கடந்த திங்கட்கிழமை தனது 110வது...