ஆஸ்திரேலியாவில் திரவ பால் விலை கடந்த 12 மாதங்களில் வேகமாக உயர்ந்துள்ளது. பல்பொருள் அங்காடிகளில் ஒரு லீற்றர் பாலின் குறைந்தபட்ச விலை 1.60 டொலர்களாக அதிகரித்துள்ளதாக சந்தை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கடந்த வருடத்தில் ஏற்பட்ட காலநிலை மாற்றங்களினால் உற்பத்தியில் தடங்கல் ஏற்பட்டுள்ளமை மற்றும் எரிபொருள் விலைகள் துரிதமாக அதிகரித்தமையே இதற்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன. கால்நடை வளர்ப்புத் தொழிலில் தொழிலாளர்களின் கடும் பற்றாக்குறையும் இதற்கு மற்றொரு காரணம் என்று கூறப்படுகிறது. பொதுவாக, ஆஸ்திரேலியாவில் அதிக திரவ பால் உற்பத்தியாகும் இரண்டு மாதங்கள் அக்டோபர் மற்றும் நவம்பர் ஆகும், ஆனால் இந்த ஆண்டு மொத்த உற்பத்தி 6.6 சதவீதம் குறைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த நிலைமை அடுத்த வருடத்தின் முதல் காலாண்டில் மீளமைக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.