Newsசிறார்களுக்கு சிகரெட் விற்பனை செய்ய தடை - கடுமையான விதிகளை அமுல்படுத்திய...

சிறார்களுக்கு சிகரெட் விற்பனை செய்ய தடை – கடுமையான விதிகளை அமுல்படுத்திய நியூசிலாந்து!

-

சிறார்களுக்கு சிகரெட் விற்பனை செய்வதை தடை செய்யும் கடுமையான விதிமுறைகளை நியூசிலாந்து அமல்படுத்தியுள்ளது.

எனவே, ஜனவரி 01, 2009 க்குப் பிறகு பிறந்த எவரும் சிகரெட் வாங்குவது தடைசெய்யப்பட்டுள்ளது, அதே விதி அவர்களின் வாழ்நாள் முழுவதும் நடைமுறையில் இருக்கும்.

இந்த விதிமுறைகளை மீறினால் விற்பனையாளர் மற்றும் வாங்குபவர் இருவருக்கும் NZ$150,000 அபராதம் விதிக்கப்படும்.

2025ஆம் ஆண்டுக்குள் நியூசிலாந்தை புகையில்லா நாடாக மாற்றுவதுதான் நோக்கம் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

புதிய திருத்தங்களில் சிகரெட்டில் உள்ள நிகோடின் அளவைக் குறைப்பது மற்றும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் சிகரெட் விற்பனை செய்யும் கடைகளின் எண்ணிக்கையை 90 சதவீதம் குறைக்க வேண்டும்.

அரசாங்கத்திற்கு கிடைக்கும் வருமானம் குறைவடைந்தாலும் புகைப்பிடிப்பதால் நோய்வாய்ப்படும் மக்களின் செலவு கணிசமாகக் குறையும் என நியூசிலாந்து அரசாங்கம் வலியுறுத்துகிறது.

எவ்வாறாயினும், இந்த முன்மொழிவு சட்டவிரோத சிகரெட்டுகளின் அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்று நியூசிலாந்து எதிர்க்கட்சி குற்றம் சாட்டுகிறது.

Latest news

ஆஸ்திரேலியாவில் மலிவு விலையில் வீடுகள் காணப்படும் பகுதிகள்

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த விலையில் உள்ள புறநகர்ப் பகுதிகளை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி, பிரிஸ்பேன்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ம் பியர் விலை

அவுஸ்திரேலியாவில் பியர் மீதான வரி அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதால் பியர் விலை உயரும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி அதிகரிப்பு நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்...

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக உள்ள ரஷ்யா!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல்கள்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

ஒலிம்பிக் சரித்திரம் படைத்த ஆஸ்திரேலியாவின் ரக்பி அணி

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில்...