Murray ஆற்றின் தெற்கு ஆஸ்திரேலிய பகுதி அத்தியாவசிய நடவடிக்கைகள் தவிர வேறு எந்த பொழுதுபோக்கு நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதற்கு உடனடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
வரும் ஜனவரி மாதத்தின் நடுப்பகுதி வரை இந்த தடை அமலில் இருக்கும் என்று அம்மாநில பிரதமர் பீட்டர் மலினௌஸ்காஸ் அறிவித்தார்.
ஆற்றின் நீர்மட்டம் உயர்வதால் மக்கள் ஆபத்தில் சிக்குவதை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இதனால் நீச்சல் – படகுகள் அல்லது பிற கப்பல்களை ஓட்டுவது தடைசெய்யப்படும். இருப்பினும், ஆற்றை வேலை நோக்கங்களுக்காக / மீட்பு நடவடிக்கைகள் / உணவு அல்லது எரிபொருளின் விநியோகத்திற்காக பயன்படுத்த கூடுதல் அனுமதி வழங்கப்படுகிறது.
அந்த நடவடிக்கைகளுக்கும் கப்பல்களின் அதிகபட்ச வேகம் 04 முடிச்சுகளாக வைக்கப்பட வேண்டும்.