மோசமான வானிலை காரணமாக மெல்போர்ன் சர்வதேச விமான நிலையத்தில் பல விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
பலத்த மழை மற்றும் மின்னல் காரணமாக, பல விமானங்கள் இன்று பிற்பகல் தாமதமாகியுள்ளன.
மேற்கூரை இடிந்து விழுந்ததால் விமான நிலையத்தின் ஒரு பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
அடுத்த சில மணிநேரங்களில் Maryborough, Ballarat, Melbourne, Traralgon, Sale, Moe ஆகிய இடங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று கிட்டத்தட்ட 100,000 பயணிகள் மெல்போர்ன் விமான நிலையத்தை கடந்து செல்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.