Sports ஆர்ஜென்டினா நாணயத்தாளில் மெஸ்ஸியின் புகைப்படம்!

ஆர்ஜென்டினா நாணயத்தாளில் மெஸ்ஸியின் புகைப்படம்!

-

36 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கிண்ண காற்பந்து தொடரில் கிண்ணத்தை வென்ற ஆர்ஜென்டினா அணித் தலைவர் மெஸ்ஸியின் புகைப்படத்தை, அந்நாட்டு நாணயத்தாளில் (ஆர்ஜென்டின் பெசோ) வெளியிட ஆலோசனை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆர்ஜென்டினாவின் நாணயமானது, ‘ஆர்ஜென்டின் பெசோ’ என அழைக்கப்படுகிறது.

உலகக்கிண்ண காற்பந்து தொடரில் 36 ஆண்டுகளுக்கு பின் சம்பியன் கிண்ணம் வென்ற உற்சாகத்தில் ஆர்ஜென்டினா உள்ளது. இதற்கு முன்னர் அந்த அணி 1978இல் அந்த அணி கிண்ணத்தை வென்றிருந்தது.

இதனால், ஆர்ஜென்டினா உற்சாகத்தில் மிதக்கிறது. கிண்ணத்துடன் தாயகம் திரும்பிய அணித்தலைவர் மெஸ்ஸி, ஏஞ்சல் டி மரியா உள்ளிட்டோரை காண இலட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் திரண்டனர். வீரர்கள் திறந்தவெளி பஸ்ஸில் ஊர்வலமாக வந்தனர்.

இந்நிலையில், உலகக்கிண்ணத்தை பெற்றுத்தந்த அணித்தலைவர் மெஸ்ஸியை கௌரவிக்கும் வகையில், ஆர்ஜென்டினா நாணயத்தாள்களில் அவரது படத்தை அச்சிட அந்நாட்டு ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருகிறது.

இது தொடர்பாக அந்நாட்டு நாளிதழ்கள் வெளியிட்ட செய்தியில், ஆர்ஜென்டினா பணமதிப்பின்படி 1,000 பெசோ நாணயத்தாளில் படத்துடன், 1,000 என்பதை ‘IO’ என அச்சடிக்கவும், பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி (Lionel Scaloni)யை கௌரவிக்க, கரன்சியில், அவரது பெயரை குறிக்கும் “La Scaloneta” என்ற வார்த்தையை அச்சிடுவது குறித்தும் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நன்றி தமிழன்

Latest news

மருத்துவ ஆலோசனைக்காக காத்திருக்கும் நேரம் இன்னும் அதிகமாகிறது!

ஒரு ஆஸ்திரேலியர் மருத்துவ ஆலோசனை பெற காத்திருக்க வேண்டிய காலம் அதிகரித்துள்ளது. 39 சதவீத மக்கள் அவசர சிகிச்சைக்காக...

சீன உளவு பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது!

அட்லாண்டிக் பெருங்கடலில் உளவு பார்த்ததாகச் சந்தேகிக்கப்படும் சீனப் பலூன், தனது ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. சீனாவால்...

சிட்னியின் Glebe Market 31 ஆண்டுகளுக்குப் பிறகு மூடப்படவுள்ளது!

சிட்னியில் பிரபலமான வார இறுதி ஷாப்பிங் பகுதியான Glebe Market 31 ஆண்டுகளுக்குப் பிறகு மூட முடிவு செய்துள்ளது.

NSW குடியிருப்பாளர்களுக்கு $250 மின்சார கட்டணம் தள்ளுபடி!

நியூ சவுத் வேல்ஸ் லிபரல் கட்சி அடுத்த மாதம் நடைபெறவுள்ள மாநிலத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றால், மின் கட்டணத்திற்கு $250 கட்டணச்...

சிட்னியின் Glebe Market 31 ஆண்டுகளுக்குப் பிறகு மூடப்படவுள்ளது!

சிட்னியில் பிரபலமான வார இறுதி ஷாப்பிங் பகுதியான Glebe Market 31 ஆண்டுகளுக்குப் பிறகு மூட முடிவு செய்துள்ளது.

NSW குடியிருப்பாளர்களுக்கு $250 மின்சார கட்டணம் தள்ளுபடி!

நியூ சவுத் வேல்ஸ் லிபரல் கட்சி அடுத்த மாதம் நடைபெறவுள்ள மாநிலத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றால், மின் கட்டணத்திற்கு $250 கட்டணச்...