Cinemaஒஸ்கருக்கு தெரிவானது RRR திரைப்படப் பாடல்!

ஒஸ்கருக்கு தெரிவானது RRR திரைப்படப் பாடல்!

-

ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் சிறந்த இசைக்கான ஒஸ்கர் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

இந்த திரைப்படத்தின் மிகப் பிரபலமான நாட்டு, நாட்டு பாடல் மாபெரும் வரவேற்பு பெற்றது. இந்தப் பாடலில் ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் ராம் சரணின் நடனம், பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.

எம்.எம். கீரவாணி இசையமைப்பில் உருவான இந்தப் பாடலை, ராகுல் மற்றும் கால பைரவா பாடியிருந்தனர்.

இந்த பாடல் உக்ரைனில் படமாக்கப்பட்டது என்று இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி தெரிவித்தார். இது உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு வெளியே படமாக்கப்பட்டது.

“நாம் நாட்டு நாட்டு பாடலை உக்ரைனில் படமாக்கினோம். அது உண்மையான இடம். அதிர்ஷ்டவசமாக உக்ரைன் ஜனாதிபதி தொலைக்காட்சி நடிகராக இருந்ததால் படப்பிடிப்பு நடத்த அனுமதி அளித்துள்ளார். . வேடிக்கையான விடயம் என்னவென்றால், அவர் ஜனாதிபதி ஆவதற்கு முன்பு ஒரு தொலைக்காட்சி தொடரில் நடித்துள்ளார் என ஆர்.ஆர்.ஆர் பட தயாரிப்பாளர் கூறினார்.

நாட்டு நாட்டு பாடலில் கிட்டத்தட்ட 80 மாறுபாடுகள் இருந்தன. நடிகர்களான ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் ஆகியோர் பாடலுக்கு 18 தடவைகள் எடுத்து கொண்டனர். எஸ்.எஸ்.ராஜமவுலி கடைசியில் இரண்டாவது தடவையை சிறந்ததாகத் தேர்ந்தெடுத்தார்.

நன்றி தமிழன்

Latest news

71 வயதில் காலமானார் குயின்ஸ்லாந்து முன்னாள் அமைச்சர்!

குயின்ஸ்லாந்து மாநிலத்தின் முன்னாள் தொழிலாளர் அமைச்சர் Gordon Nuttall, புற்றுநோயுடன் போராடி தனது 71 வயதில் காலமானார். Beattie அரசாங்கத்தில் ஒரு மூத்த நபராக Nuttall இருந்தார்....

பாலியல் பொம்மையுடன் MRI ஸ்கேன் செய்யப்பட்ட பெண் ஆபத்தான நிலையில்

ஒரு பெண்ணின் ஆசனவாயில் Sex Toy செருகப்பட்டதால், MRI ஸ்கேன் எடுக்கும்போது அவருக்கு உட்புறத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பொதுவாக, நோயாளிகள் MRI ஸ்கேன் எடுக்கும்போது அவர்கள்...

மேற்கு ஆஸ்திரேலிய மக்கள் தடுப்பூசி பெறுவது கட்டாயம் – சுகாதார அதிகாரிகள்

மேற்கு ஆஸ்திரேலியாவில் காய்ச்சல் தடுப்பூசி போடுவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது . தேசிய நோய்த்தடுப்பு ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு மையத்தின் தரவுகளின்படி, மேற்கு ஆஸ்திரேலியாவில் 65 வயதுக்குட்பட்டவர்களில் காய்ச்சல்...

நிலையான வட்டி விகிதங்களைக் குறைக்கும் ANZ வங்கி

ரிசர்வ் வங்கியின் அடுத்த பணவியல் கொள்கை நடவடிக்கைக்கு இன்னும் 11 நாட்கள் மீதமுள்ள நிலையில், நிலையான வட்டி விகிதங்களைக் குறைக்க ANZ வங்கிக்கு ரிசர்வ் வங்கி...

பாலியல் பொம்மையுடன் MRI ஸ்கேன் செய்யப்பட்ட பெண் ஆபத்தான நிலையில்

ஒரு பெண்ணின் ஆசனவாயில் Sex Toy செருகப்பட்டதால், MRI ஸ்கேன் எடுக்கும்போது அவருக்கு உட்புறத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பொதுவாக, நோயாளிகள் MRI ஸ்கேன் எடுக்கும்போது அவர்கள்...

மெல்பேர்ணில் பாதசாரி கடவையில் குழந்தையை மோதிய தப்பியோடிய சந்தேக நபர்

மெல்பேர்ணின் Murrumbeena ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள பாதசாரி கடவையில் ஒரு குழந்தையை மோதி விபத்துக்குள்ளாக்கிய ஓட்டுநரைக் கண்டுபிடிக்க காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது. மே 1 ஆம்...