Newsதற்காலிக பாதுகாப்பு விசாவிலுள்ளவர்களுக்கு நிரந்தர விசா - அடுத்த ஆண்டு அறிவிப்பு!

தற்காலிக பாதுகாப்பு விசாவிலுள்ளவர்களுக்கு நிரந்தர விசா – அடுத்த ஆண்டு அறிவிப்பு!

-

ஆஸ்திரேலியாவில் தற்காலிக பாதுகாப்பு விசாவுடன் வாழ்ந்துவரும் சுமார் 19 ஆயிரம் அகதிகளுக்கான நிரந்தர விசா வழங்கும் நடவடிக்கை அடுத்த ஆண்டு முதல் ஆரம்பிக்கப்படுமென செய்திகள் தெரிவிக்கின்றன.

அகதிகளுக்கான நிரந்தர விசா குறித்த அறிவிப்பை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிடுவதற்கு லேபர் அரசு திட்டமிட்டுள்ளதாக The Guardian, Sydney Morning Herald உள்ளிட்ட ஊடகச்செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்கீழ் ஆஸ்திரேலியாவில் தற்காலிக பாதுகாப்பு விசாவுடன் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்துவரும் சுமார் 19 ஆயிரம் அகதிகள், நிரந்தர வதிவிட விசாவிற்கு விண்ணப்பிப்பதற்கு தகுதிபெறவுள்ளதுடன் social security benefits போன்ற அரச மானியங்களைப் பெறுவதற்கும் தகுதிபெறவுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கு சுதந்திரமாக சென்றுவருவதற்கும், தமது குடும்பத்தினரை ஆஸ்திரேலியா வரவழைப்பதற்கு விண்ணப்பிக்கவும் முடியும்.

இவ்வாறு நிரந்தர விசா பெறுவதற்குத் தகுதியுள்ளவர்களில் ஈராக், ஆப்கானிஸ்தான், ஈரான், மியன்மார் மற்றும் இலங்கை நாடுகளைச் சேர்ந்த அகதிகள் அடங்குகின்றனர்.

இவர்கள் அனைவரும் TPV எனப்படும் 3 வருட விசா அல்லது SHEV எனப்படும் 5 வருட விசாவில் இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் இந்த விசாவை கடந்த 10 ஆண்டுகளில் அவர்கள் ஒரு தடவையாவது புதுப்பித்திருக்க வேண்டும்.

2023ம் ஆண்டில் அரசு அறிவிக்கவுள்ள மாற்றத்தின்கீழ் குறித்த 19 ஆயிரம் பேரும், அவர்களது TPV அல்லது SHEVஇலிருந்து Resolution of Status Visa என்பதற்கு மாற்றப்படுவர். அதன் பின்னர் அவர்கள் ஆஸ்திரேலிய நிரந்தர வதிவிடம்பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்படுகிறது.

லேபர் கட்சி ஆட்சிக்கு வந்தால், ஆஸ்திரேலியாவில் தற்காலிக பாதுகாப்பு விசாவுடன் உள்ளவர்களுக்கு நிரந்தர பாதுகாப்பு விசா வழங்கப்படும் என்பதாக தேர்தல் வாக்குறுதியை வழங்கியிருந்தபோதிலும், இந்த வாக்குறுதியை அரசு இன்னமும் நிறைவேற்றவில்லை என்ற விமர்சனங்கள் தொடர்கின்றன.

TPVகள் மற்றும் SHEVகளை ஒழிப்பதற்கான அதன் வாக்குறுதியை லேபர்கட்சி எப்போது நிறைவேற்றும் என, கடந்த மாதம் நாடாளுமன்றத்தில்வைத்து குடிவரவு அமைச்சர் Andrew Gilesஇடம் சுயேச்சை எம்.பி.க்கள் Andrew Wilkie மற்றும் Monique Ryan இருவரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் Giles, இவ்விடயத்தில் உள்துறை அமைச்சர் Clare O’Neil உடன் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவித்திருந்தார்.

அதேநேரம் புதிய ஆண்டு ஆரம்பப்பகுதியில் TPV மற்றும் SHEV குறித்த தமது கொள்கை அறிவிப்பை அரசு வெளியிடும் என சுட்டிக்காட்டப்படுகிறது.

ஆனால் தமது அகதி விண்ணப்பக் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட நிலையில் மேன்முறையீடுசெய்துவிட்டு Bridging விசாவுடன் காத்திருக்கும் சுமார் 12 ஆயிரம் புகலிடக்கோரிக்கையாளர்களின் எதிர்காலம் தொடர்ந்தும் கேள்விக்குறியாகவே உள்ளது.

இவர்களது விண்ணப்பங்கள் தொடர்பில் குடிவரவு அமைச்சர் இறுதிமுடிவினை இன்னமும் எடுக்கவில்லை என குறிப்பிடப்படுகிறது.

Latest news

விக்டோரியாவில் புதிய பொதுப் போக்குவரத்து விதிகள்

2026 ஆம் ஆண்டு புத்தாண்டு வருகையுடன், விக்டோரியாவின் பொதுப் போக்குவரத்து அமைப்பில் பல குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வரும். மாநிலம் முழுவதும் 18 வயதுக்குட்பட்ட...

நியூயார்க் நகரில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முஸ்லிம் மேயர்

ஜனநாயகக் கட்சி வேட்பாளர் சோஹ்ரான் மம்தானி நியூயார்க் நகர மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பதவியேற்பு விழாவில், அமெரிக்காவின் மிகப்பெரிய நகரத்தின் உழைக்கும் மக்களுக்காக உழைப்பதாக அவர் உறுதியளித்தார். 34 வயதான...

அமெரிக்க குடிமக்களுக்கு ஆபிரிக்க நாடுகள் தடை

அமெரிக்க குடிமக்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைவதை மாலி மற்றும் புர்கினோ பசோ ஆகிய நாடுகள் தடை செய்துள்ளன. மாலி மற்றும் புர்கினோ பசோ ஆகிய நாடுகளின் குடிமக்கள்...

ஸ்மார்ட்போன்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆஸ்திரேலியர்கள்

2026 ஆம் ஆண்டு புத்தாண்டு வருகையுடன், உலகெங்கிலும் உள்ள பலர் தங்கள் மன நலனுக்காக முக்கியமான முடிவுகளை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இது ஒரு 'Digital Detox'...

ஸ்மார்ட்போன்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆஸ்திரேலியர்கள்

2026 ஆம் ஆண்டு புத்தாண்டு வருகையுடன், உலகெங்கிலும் உள்ள பலர் தங்கள் மன நலனுக்காக முக்கியமான முடிவுகளை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இது ஒரு 'Digital Detox'...

ஆஸ்திரேலிய கடற்கரைகளில் நிர்வாணமாக இருப்பது தவறா?

உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் பொது இடங்களில் நிர்வாணம் தடைசெய்யப்பட்டிருந்தாலும், ஆஸ்திரேலியாவின் சில கடற்கரைகளில் இது சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படுகிறது. இந்த நிர்வாண கடற்கரை கலாச்சாரத்தின் (Naturism) பின்னணியில்...