Sportsசென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களின் முழு விபரம் - IPL...

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களின் முழு விபரம் – IPL 2023

-

16-வது ஐ.பி.எல். T20 கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல்- மே மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில். இதையொட்டி 10 அணிகள் மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்துக் கொண்டன. 85 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், விடுவிக்கப்பட்ட வீரர்களுக்குரிய இடத்தை நிரப்புவதற்காக ஐ.பி.எல். வீரர்களுக்கான மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்றது.

கொச்சியில் நடைபெற்ற ஐ.பி.எல் மினி ஏலத்தில் 10 அணிகள்.167 கோடி(இந்திய ரூபா) செலவு செய்து 29 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 80 வீரர்களை ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.

இந்நிலையில், குறித்த ஏலத்தில் சென்னை அணி எடுத்த வீரர்கள் முழு விவரம் வெளியாகியுள்ளது.

அந்த வகையில், ஏலத்தில் முதல் வீரராக, இந்திய வீரர் ரகானேவை அடிப்படை தொகையான ரூ.50 இலட்சத்திற்கு (இந்திய ரூபா) ஏலத்தில் எடுத்துள்ளது. கடந்த தொடரில் இவர் கொல்கத்தா அணிக்காக விளையாடி வந்தமை குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தைச் சேர்ந்த அதிரடி வீரரான பென் ஸ்டோக்ஸ் ரூ.16.25 கோடி (இந்திய ரூபா) எனும் தொகைக்கு ஏலத்தில் எடுத்தது .

ஆந்திராவைச் சேர்ந்த 18 வயதான ஷேக் ரஷீத்தை அடிப்படை விலையான ரூ.20 இலட்சத்திற்கு(இந்திய ரூபா), சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

ஹரியானாவைச் சேர்ந்த நிஷாந்த் சிந்து 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கிண்ணத் தொடரை வென்ற இந்திய அணியில் இடம்பெற்று இருந்தார். இவரை இறுதியில் ரூ. 60 இலட்சத்திற்கு (இந்திய ரூபா) சென்னை அணி சென்னை அணி ஏலத்தில் எடுத்தது.

நியூசிலாந்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான கைல் ஜேம்சனை அடிப்படை தொகையான ரூ.1 கோடிக்கு(இந்திய ரூபா) சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

சத்தீஸ்கரைச் சேர்ந்த சகலதுறை வீரரான அஜய் மண்டல் என்பவரையும், ஐதராபாத்தை சேர்ந்த பகத் வர்மாவையும் ரூ.20 இலட்சத்திற்கு(இந்திய ரூபா) சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களின் முழு விவரம் வருமாறு:

எம்.எஸ்.டோனி, டேவான் கான்வே, ருதுராஜ், ராயுடு, சேனாபதி, மொயின் அலி , ஷிவம் துபே, ஹங்கர்கேகர், பிரிட்டோரியஸ், சான்ட்னர், ஜடேஜா, துஷார், முகேஷ், பத்திரன, சிமர்ஜீத், தீபக் சாஹர், சோலங்கி, தீக்ஷனா, ஸ்டோக்ஸ், ரஹானே, ரஷீத், நிஷாந்த் சிந்து, ஜமீசன், அஜய் மான்டால் , பகத் வர்மா

நன்றி தமிழன்

Latest news

இந்தியா பாகிஸ்தானிடையே போர்

இந்தியாவின் முப்படைகளும் இணைந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன. கடற்பகுதிகளில் நீர்மூழ்கி கப்பல்கள், கடற்படை கப்பல்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவான 8000 எக்ஸ் தள...

பிரபலமான சேவையை நிறுத்தவுள்ள Woolworths

ஜூன் 1 முதல் Delivery Unlimited வாடிக்கையாளர்களுக்கு Double Everyday Rewards points பலனை இனி வழங்கப்போவதில்லை என்று Woolworths தெரிவித்துள்ளது. நிறுவனம் Delivery Unlimited திட்டத்தை நெறிப்படுத்த...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...