Newsமோசமடைந்த நிலையில் பீலேவின் உடல் நிலை!

மோசமடைந்த நிலையில் பீலேவின் உடல் நிலை!

-

பீலே உடல் நிலை மோசமாக உள்ளதாகவும் இவரது சிறுநீரகம், இருதயம் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே, (82 வயது) மூன்று முறை உலகக்கிண்ணம் (1958, 1962, 1970) வென்ற அணியில் இடம் பெற்றவர். பிரேசில் அணிக்காக 77 கோல் அடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக 1,363 போட்டிகளில் 1,281 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். சிறுநீரகத்தில் இருந்த கற்களை அகற்ற சத்திரசிகிச்சை செய்த இவரது, பெருங்குடலின் வலது பக்கத்தில் புற்றுநோய் கட்டி இருந்தமை கண்டறியப்பட்டது.

உடனடியாக சத்திரசிகிக்சை செய்து கட்டி அகற்றப்பட்டது. பின் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதில் இருந்து மீண்ட பீலே, சமீபத்தில் சாவ் பாலோவில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். புற்றுநோய் சிகிக்கைக்காக இவருக்கு ‘கீமோதெரபி’ சிகிச்சை தரப்பட்டது. பின் கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளால் அவதிப்பட, தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார்.

பீலே விரைவில் குணமடைய வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் பிரார்த்தனைகள் குவிகின்றன. இதனிடையே புற்றுநோய் பாதிப்பு அதிகரித்துள்ளது. சிறுநீரகம், இருதயம் பாதிக்கப்பட்டுள்ளது. இவரது உடல்நிலை அபாய கட்டத்தில் உள்ளது. இதுகுறித்து மருத்துவமனை தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

பீலே மகள் கெலி நாசிமென்டோ கூறுகையில்,” மருத்துவர்கள் தரப்பில் பல்வேறு காரணங்கள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து மருத்துவமனையில் தங்குவது தான் சிறந்தது. இங்கு சிறப்பாக சிகிச்சை அளிக்கப்படுகிறது,” என்றார்.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் மலிவு விலையில் வீடுகள் காணப்படும் பகுதிகள்

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த விலையில் உள்ள புறநகர்ப் பகுதிகளை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி, பிரிஸ்பேன்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ம் பியர் விலை

அவுஸ்திரேலியாவில் பியர் மீதான வரி அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதால் பியர் விலை உயரும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி அதிகரிப்பு நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்...

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக உள்ள ரஷ்யா!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல்கள்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

ஒலிம்பிக் சரித்திரம் படைத்த ஆஸ்திரேலியாவின் ரக்பி அணி

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில்...