Article 2026-ல் வெளியாகும் ஆப்பிள் கார் - விலையும் வெளியானது.

2026-ல் வெளியாகும் ஆப்பிள் கார் – விலையும் வெளியானது.

-

ஆப்பிள் தனது ‘ஆப்பிள் கார்’ என குறிப்பிடப்படும் மின்சார வாகனத்தை 2026-ஆம் ஆண்டு வரை தாமதப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது, மேலும் இதன் விலை $1,00,000-க்குள் (ரூ. 80 லட்சத்திற்குள்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனம், ஆதன் self-driving மின்சார வாகனத்திற்கான அதன் பார்வையை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில், ‘டைட்டன்’ என அழைக்கப்படும் இந்த வாகனத்தின் திட்டம் கடந்த சில மாதங்களாக இழுபறியில் இருந்ததாகத் தெரிகிறது.

தொடக்கத்தில், ஐபோன் நிறுவனம் ஸ்டீயரிங் அல்லது பெடல்கள் இல்லாத ஒரு காரை உருவாக்க திட்டமிட்டது, இதில் பயணிகள் ஒரு limousine-style-ல் ஒருவரையொருவர் எதிரெதிரே பார்க்கும் வகையில் அமரலாம் என கூறப்பட்டது.

ஆனால், இத்திட்டம் இப்போது நோக்கம் குறைக்கப்பட்டுள்ளது என்றும், இதில் ஓட்டுநர் இருக்கை, ஸ்டீயரிங் மற்றும் பெடல்களுடன் மிகவும் பாரம்பரிய வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த காரில் fully autonomous driving அல்லது self-driving அம்சம் இருக்காது, ஆனால் நெடுஞ்சாலைகளில் தானாகவே ஓட்ட முடியும் என்று கூறப்படுகிறது.

சாலையில் வாகனம் ஓட்டும்போது பயனர்கள் கேம்களை விளையாடுவதற்கு அல்லது வீடியோக்களைப் பார்ப்பதற்கு போதுமான அளவிற்கு சுயமாக இயங்கும், ஆனால் அதிக ட்ராபிக் அல்லது மோசமான வானிலையின் போது அவ்வாறு இயங்காது என கூறப்படுகிறது

இந்த வாகனத்திற்கான வசதிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் மீண்டும் குறைக்கப்பட்டுள்ளதால், ஆப்பிள் காரின் விலை முதலில் எதிர்பார்க்கப்பட்ட $120,000க்கு பதிலாக $100,000க்குக் கீழ் இருக்கும் என கூறப்படுகிறது.

வாகனத்தின் வடிவமைப்பு இன்னும் நிறுவனத்தால் வேலை செய்யப்பட்டு வருகிறது, ஆனால் அடுத்த ஆண்டு இறுதிக்குள் அது முடிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதைத் தொடர்ந்து, காருக்கான அம்சங்களின் பட்டியல் 2024-ஆம் ஆண்டளவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் 2026-ஆம் ஆண்டின் வெளியீட்டிற்கு முன்னதாக 2025-ஆம் ஆண்டில் சோதனை தொடங்கும்.

Latest news

11 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆஸ்திரேலியாவின் பண விகிதம் 4% ஐத் தாண்டியது

11 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியதால் ஆஸ்திரேலியாவின் பணவீக்கம் 04 சதவீதத்தை தாண்டியுள்ளது.

விக்டோரியாவில் ஆரம்பநிலைக்கு கார் பதிவு இலவசம்

விக்டோரியா மாகாணத்தில் தொழிற்பயிற்சி படிக்கும் பயிற்சியாளர்களுக்கு அவர்களின் கார்களை இலவசமாக பதிவு செய்வதற்கான புதிய திட்டத்தை விக்டோரியா மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

மாரிசன் காலத்தில் பல சுகாதாரத் திட்டங்களில் பணம் தவறாகப் பயன்படுத்தப்பட்டது

ஸ்காட் மொரிசனின் ஆட்சிக் காலத்தில் சுகாதாரம் மற்றும் வைத்தியசாலைத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான கணக்காய்வு அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் TikTok பயன்பாடு குறித்த முதல் அதிகாரப்பூர்வ அறிக்கை

ஆஸ்திரேலியாவில் TikTok பயனர்கள் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஆஸ்திரேலிய மக்கள்தொகையில் 30 சதவீதம்...

ஆஸ்திரேலியாவில் TikTok பயன்பாடு குறித்த முதல் அதிகாரப்பூர்வ அறிக்கை

ஆஸ்திரேலியாவில் TikTok பயனர்கள் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஆஸ்திரேலிய மக்கள்தொகையில் 30 சதவீதம்...

37 ஆண்டு சாதனையை முறியடித்த பெர்த் மழை

37 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜூன் மாதத்தில் ஒரு நாளில் பெர்த்தில் பெய்த கனமழை கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ளது.