சீனாவில் 26 வது மாடியில் இருந்து கீழே விழுந்த iPhone சேதம் எதுவும் ஏற்படாமல் பாதுகாப்பாக இருந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.
சீனாவின் புஜியான் மாகாணத்தில் உள்ள நிங்டேயில் உள்ள சீன பெண் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 26வது மாடியின் பால்கனியில் இருந்து தனது iPhone 12 Pro ஸ்மார்ட்போனை தவறவிட்டுள்ளார்.
டிசம்பர் 18ம் திகதி நடைபெற்ற இந்த சம்பவத்தில், 26வது மாடியில் இருந்து அவருடைய ஐபோன் கீழே விழுந்தாலும், அது முழுமையாக சேதமடையவில்லை என்று கூறப்படுகிறது.
26வது மாடியில் இருந்து ஐபோன் 12 ப்ரோ கீழே விழுந்தாலும், அது கட்டிடத்தின் 2வது மாடியில் உள்ள ஃபோம் செய்யப்பட்ட மேடையில் விழுந்ததால் சேதமடையாமல் தப்பித்திருக்கிறது என்று தெரியவந்துள்ளது.
மேலும் அந்த பெண்ணின் ஐபோனை அந்த கட்டிடத்தின் உதவியாளர்கள் இரண்டாவது மாடியில் இருந்து மீட்டெடுத்த போது ஐபோன் சாதனத்தின் டிஸ்பிளே சேதமடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் இணையத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தாலும், எப்படி இது சாத்தியம் என்று தான் பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் ஐபோன் பில்ட் (iPhone built) அவ்வளவு தரமானது என்று ஆப்பிள் ரசிகர்கள் கெத்தாக ஸீன் போட்டுக் கொண்டு வருகின்றனர்.