Breaking Newsஉலகப் புகழ் பெற்ற உதைபந்தாட்ட ஜாம்பவான் பீலே காலமானார்!

உலகப் புகழ் பெற்ற உதைபந்தாட்ட ஜாம்பவான் பீலே காலமானார்!

-

உலகப் புகழ் பெற்ற உதைபந்தாட்ட வீரர் பீலே (82) பிரேசிலில் காலமானார்!

தென்அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் பிரபல உதைபந்து வீரர் பீலேவுக்கு (வயது 82). கடந்த ஆண்டு பெருங்குடலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. இதன்பின்னர், அவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பரில் இருந்து கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததது.

சமீப நாட்களாக அவரது உடல்நலம் பலவீனமடைந்து இருந்தது. இதனையடுத்து, பிரேசிலின் சாவ் பொல்ஹொ பகுதியில் உள்ள மருத்துவமனையில் கடந்த மாதம் இறுதியில் பீலே அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வைத்தியர்கள் தொடந்து சிகிச்சை அளித்து வந்தனர். புற்றுநோய் மிகவும் முன்னேறி உடலின் சில பாகங்களுக்கு பரவியது.

மேலும், நுரையீரல், இதய செயல் இழப்பு தொடர்பான சிகிச்சைகளுக்கான அதிநவீன பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பீலேவை வைத்தியர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வந்தனர். இந்த சூழலில் பீலேவின் இதயம் மற்றும் சிறுநீரகம் தீவிரமாக பாதிப்பு அடைந்தது. தொடர்ந்து ஆபத்தான நிலையில் பீலேவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இதயம் மற்றும் சிறுநீரகம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி கால்பந்து ஜாம்பவான் பீலே உயிரிழந்ததாக அவரது மகள் தனது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக எல்லா காலத்திலும் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக கருதப்படும் பீலே மூன்று முறை உலகக் கோப்பையை வென்றவர். அவரது முதல் உலகக் கோப்பை வெற்றி 1958 இல் ஸ்வீடனில் கிடைத்தது. அரையிறுதியில் ஹாட்ரிக் கோல் அடித்தார். பிரேசிலின் 1962 உலகக் கோப்பையின் போது அவர் காயமடைந்தார்.

தொடர்ந்து பீலே 1970 ஆம் ஆண்டில் மூன்றாவது முறையாக உலகக் கோப்பை கோப்பையை தனது கைகளில் பெற்றார் மற்றும் தங்கப் பந்தை வென்றார். போட்டியில் 4 கோல்கள் அடித்தார். பிபா (FIFA) உலகக் கோப்பைகளில் அதிக வெற்றிகளைப் பெற்ற வீரர் என்ற கின்னஸ் புத்தகத்தில் பீலே இடம்பெற்றிருந்தார். 16 வயதில் பிரேசில் அணியில் அறிமுகமான பீலே, தனது நாட்டு அணியில் 1971 ஆம் ஆண்டு வரை இடம்பெற்றிருந்தார். .

இந்நிலையில் பீலே மறைவுக்கு உலகெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்கள், தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். .

நன்றி தமிழன்

Latest news

புதிய ஒப்பந்தத்தின் கீழ் ஒரு சமூகத்திற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து நிரந்தர வதிவிடம்

கடல் மட்ட உயர்வு அச்சுறுத்தலுக்கு உள்ளான Tuvalu-இன் முதல் குடியிருப்பாளர்களை ஆஸ்திரேலியாவில் குடியேற அனுமதிக்கும் ஒப்பந்தத்தின் கீழ் குடியேற்ற அரசாங்கம் சமீபத்தில் நடவடிக்கை எடுத்தது. Tuvalu மற்றும்...

வெளிநாட்டு ஓட்டுநர்களுக்கான உரிம விதிகளை கடுமையாக்கும் NSW

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஓட்டுநர் உரிமங்களைப் பெறுவதற்கு முன்னர் தளர்வான முறை நீக்கப்பட்டு, இன்று முதல் அமலுக்கு வருகிறது. 16 வெளிநாடுகளைச் சேர்ந்த ஓட்டுநர்கள் தங்கள்...

தேசிய கீதம் தொடர்பாக வடகிழக்கு மாநிலப் பள்ளிகளுக்கான புதிய சட்டம்

வடக்குப் பிரதேசத்தில் உள்ள அனைத்து பொதுப் பள்ளிகளும் கூட்டங்கள் மற்றும் சிறப்பு நிகழ்வுகளில் ஆஸ்திரேலிய தேசிய கீதத்தைப் பாடுவதை கட்டாயமாக்கும் புதிய அரசாங்கக் கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது. CLP...

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிரபலமான இசை விழாவில் மாத்திரை பரிசோதனை

ஆஸ்திரேலியாவில் பிரபலமான இசை விழாவான Laneway விழாவில் முதல் முறையாக மாத்திரை பரிசோதனை (Pill Testing) வசதிகளை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு...

நிபா காரணமாக ஆஸ்திரேலியா மீண்டும் ஊரடங்கு உத்தரவில் சிக்குமா?

இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் இருந்து நிபா வைரஸ் பரவியதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா உட்பட உலகெங்கிலும் உள்ள சுகாதார அதிகாரிகள், கோவிட்-19 தொற்றுநோயை விட...

வெளிநாட்டு ஓட்டுநர்களுக்கான உரிம விதிகளை கடுமையாக்கும் NSW

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஓட்டுநர் உரிமங்களைப் பெறுவதற்கு முன்னர் தளர்வான முறை நீக்கப்பட்டு, இன்று முதல் அமலுக்கு வருகிறது. 16 வெளிநாடுகளைச் சேர்ந்த ஓட்டுநர்கள் தங்கள்...