Breaking Newsஉலகப் புகழ் பெற்ற உதைபந்தாட்ட ஜாம்பவான் பீலே காலமானார்!

உலகப் புகழ் பெற்ற உதைபந்தாட்ட ஜாம்பவான் பீலே காலமானார்!

-

உலகப் புகழ் பெற்ற உதைபந்தாட்ட வீரர் பீலே (82) பிரேசிலில் காலமானார்!

தென்அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் பிரபல உதைபந்து வீரர் பீலேவுக்கு (வயது 82). கடந்த ஆண்டு பெருங்குடலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. இதன்பின்னர், அவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பரில் இருந்து கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததது.

சமீப நாட்களாக அவரது உடல்நலம் பலவீனமடைந்து இருந்தது. இதனையடுத்து, பிரேசிலின் சாவ் பொல்ஹொ பகுதியில் உள்ள மருத்துவமனையில் கடந்த மாதம் இறுதியில் பீலே அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வைத்தியர்கள் தொடந்து சிகிச்சை அளித்து வந்தனர். புற்றுநோய் மிகவும் முன்னேறி உடலின் சில பாகங்களுக்கு பரவியது.

மேலும், நுரையீரல், இதய செயல் இழப்பு தொடர்பான சிகிச்சைகளுக்கான அதிநவீன பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பீலேவை வைத்தியர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வந்தனர். இந்த சூழலில் பீலேவின் இதயம் மற்றும் சிறுநீரகம் தீவிரமாக பாதிப்பு அடைந்தது. தொடர்ந்து ஆபத்தான நிலையில் பீலேவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இதயம் மற்றும் சிறுநீரகம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி கால்பந்து ஜாம்பவான் பீலே உயிரிழந்ததாக அவரது மகள் தனது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக எல்லா காலத்திலும் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக கருதப்படும் பீலே மூன்று முறை உலகக் கோப்பையை வென்றவர். அவரது முதல் உலகக் கோப்பை வெற்றி 1958 இல் ஸ்வீடனில் கிடைத்தது. அரையிறுதியில் ஹாட்ரிக் கோல் அடித்தார். பிரேசிலின் 1962 உலகக் கோப்பையின் போது அவர் காயமடைந்தார்.

தொடர்ந்து பீலே 1970 ஆம் ஆண்டில் மூன்றாவது முறையாக உலகக் கோப்பை கோப்பையை தனது கைகளில் பெற்றார் மற்றும் தங்கப் பந்தை வென்றார். போட்டியில் 4 கோல்கள் அடித்தார். பிபா (FIFA) உலகக் கோப்பைகளில் அதிக வெற்றிகளைப் பெற்ற வீரர் என்ற கின்னஸ் புத்தகத்தில் பீலே இடம்பெற்றிருந்தார். 16 வயதில் பிரேசில் அணியில் அறிமுகமான பீலே, தனது நாட்டு அணியில் 1971 ஆம் ஆண்டு வரை இடம்பெற்றிருந்தார். .

இந்நிலையில் பீலே மறைவுக்கு உலகெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்கள், தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். .

நன்றி தமிழன்

Latest news

திரும்ப அழைக்கப்பட்டுள்ள Power bank மாடல்கள்

பல்வேறு Power Bankகள் அதிக வெப்பமடைந்து தீப்பிடித்து எரியக்கூடும் என்ற அச்சம் இருப்பதால், அவற்றைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்துமாறு நுகர்வோருக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது. Amazon, eBay மற்றும் Anker...

3,800 ஆண்டுகள் பழமையான தொலைந்து போன நகரம் கண்டுபிடிப்பு

பெருவின் வடக்கு பாரன்கா பகுதியில், கிமு 1800 முதல் 1500 வரையிலான காலத்தைச் சேர்ந்த ஒரு பழங்கால, தொலைந்து போன நகரத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பெனிகோ...

விக்டோரியாவில் 14 ஆண்டுகளில் முதல் முறையாக அதிகரித்துள்ள சாலை விபத்து இறப்புகள்

கடந்த 72 மணி நேரத்தில் விக்டோரியாவில் நடந்த பத்து விபத்துகளில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மெல்பேர்ணின் வடகிழக்கில் நேற்று காலை இரண்டு வாகனங்கள் மோதியதில்...

மூன்றாம் உலகப் போர் குறித்து நேட்டோ எச்சரிக்கை

சீன ஜனாதிபதியும் ரஷ்ய பிரதமரும் ஒரே நேரத்தில் ஆக்கிரமிப்பதன் மூலம் மூன்றாம் உலகப் போர் தொடங்கும் என்று நேட்டோ தலைவர் மார்க் ருட்டே கூறுகிறார். சீன மற்றும்...

மேற்கு ஆஸ்திரேலியாவின் Karijini தேசிய பூங்கா நீச்சல் தளத்தில் விழுந்த குழந்தை

மேற்கு ஆஸ்திரேலியாவின் Karijini தேசிய பூங்காவில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்த ஒரு சிறு குழந்தையை அவசர சேவைகள் மீட்டுள்ளன. பிரபலமான Dales Gorge நீச்சல் தளத்தில் சிறுவன்...

45 வயது நபரை மணந்த 6 வயது சிறுமி

ஆப்கானிஸ்தானில் இருந்து ஆறு வயது சிறுமியை 45 வயது ஆணுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சி நடந்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பெண்ணை அவளது தந்தை...