Breaking Newsகழிவு நீரால் பரவும் கொரோனா பரவல் – அச்சத்தில் சீன மக்கள்!

கழிவு நீரால் பரவும் கொரோனா பரவல் – அச்சத்தில் சீன மக்கள்!

-

சீனாவில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டுள்ளது. இதற்கிடையே வைரஸ் பாதிப்பைக் கண்காணித்து, அதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் சீனா இறங்கியுள்ளது.

சீனாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். அதிலும் தீவிர பாதிப்பு அதிகம் ஏற்படத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. சில வாரங்களில் மாத்திரம் பல கோடி பேருக்கு அங்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பெய்ஜிங், ஷங்காய் போன்ற பெருநகரங்களில் வைரஸ் பாதிப்பு ஏற்கனவே உச்சம் தொட்டுள்ள நிலையில், இப்போது அடுத்தகட்டமாக மற்ற நகரங்களிலும் வைரஸ் பாதிப்பு உச்சம் தொட்டு வருகிறது. சீன தடுப்பூசிகளால் தீவிர பாதிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதும் வைரஸ் பரவல் இந்தளவுக்கு வேகமாகப் பரவ ஒரு காரணமாக அமைந்துவிட்டது.

இதற்கிடையே கொரோனா பரவலைக் கண்காணிக்கக் கழிவு நீர் அமைப்புகளை கண்காணிக்கும் நடவடிக்கையில் சீனா இறங்கியுள்ளது. கொரோனா பரவ தொடங்கிய சமயத்தில் சில நாடுகளில் இந்த முறை பின்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பெய்ஜிங் மற்றும் ஷென்சென் நகரங்களில் சோதனை முறையில் கழிவுநீர் கண்காணிப்பு முறையைச் சீனா ஆரம்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கழிவு நீர் மூலம் கொரோனா பரவுகிறதா என்பதைக் கண்காணிக்கவே சீனா இந்த நடைமுறையைக் கையில் எடுத்துள்ளது.

முதற்கட்ட சோதனை அடிப்படையில் பெரு நகரங்களில் மட்டும் இந்த நடவடிக்கை தொடங்கப்பட உள்ளது. அதேநேரம் கழிவு நீர், மழைநீர் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தொழிற்சாலை கழிவுநீர் என அனைத்தும் ஒரே குழாய் அமைப்பில் வருவதால், வைரஸ் பாதிப்பு குறித்த துல்லியமான பதிவுகளை பெறுவது கடினம் என்பதால் கொரோனா பாதிப்பைக் கண்காணிக்க மாற்று வழிமுறைகளையும் சீனா சிந்திக்க வேண்டும் என்றும் சில வல்லுநர்கள் வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர்.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் மலிவு விலையில் வீடுகள் காணப்படும் பகுதிகள்

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த விலையில் உள்ள புறநகர்ப் பகுதிகளை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி, பிரிஸ்பேன்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ம் பியர் விலை

அவுஸ்திரேலியாவில் பியர் மீதான வரி அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதால் பியர் விலை உயரும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி அதிகரிப்பு நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்...

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக உள்ள ரஷ்யா!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல்கள்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

ஒலிம்பிக் சரித்திரம் படைத்த ஆஸ்திரேலியாவின் ரக்பி அணி

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில்...