News கழிவறை Tissues-ம் வீட்டிலிருந்து எடுத்துசெல்லும் ஊழியர்கள் - சிக்கனத்தின் உச்சத்தில் Twitter!

கழிவறை Tissues-ம் வீட்டிலிருந்து எடுத்துசெல்லும் ஊழியர்கள் – சிக்கனத்தின் உச்சத்தில் Twitter!

-

ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ள எலான் மஸ்க் பல சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த ஒக்டோபரில், உலகின் மிக பிரபல சமூக ஊடகமான ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளரான அவர் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் மற்றும் தலைமை நிதி அதிகாரி நெட் செகல், ட்விட்டர் சட்ட மற்றும் கொள்கை நிர்வாகி விஜய காடே உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பணி நீக்கம் செய்தார்.

தொடர்ந்து பல அதிரடி நடவடிக்கைகளையும் மஸ்க் மேற்கொண்டார். நிர்வாக குழு கூண்டோடு கலைப்பு, ட்விட்டர் பயனாளர்களின் புளு டிக்கிற்கு கட்டணம் என அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த சூழலில், நிறுவனத்தில் பணியாற்ற கூடிய, கட்டிடங்களை தூய்மை செய்து, பராமரிக்கும் வேலையில் ஈடுபட்ட ஊழியர்களில் பலர் சென்பிரான்சிஸ்கோ நகரில், தங்களுக்கு அதிகளவில் சம்பளம் வழங்க வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து, அவர்களை வேலையை விட்டு நீக்கும் உத்தரவை மஸ்க் எடுத்துள்ளார். இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகளால், நிறுவன பணியாளர்கள் மிரண்டு போயுள்ளனர்.

ட்விட்டரில் சிக்கன நடவடிக்கை எதிரொலியாக, நிறுவன பணியாளர்கள் அலுவலகத்திற்கு வேலைக்கு செல்லும்போது, தங்களுடன் கழிவறைக்கு செல்வதற்கு தேவையான டிஷ்யூ பேப்பரையும் உடன் கொண்டு செல்கின்றனர் என தகவல் வெளிவந்துள்ளது.

ட்விட்டர் நிறுவனத்தில் காவல் பணி மற்றும் பராமரிப்பு பணியில் ஊழியர்கள் யாரும் ஈடுபடாத நிலையில், அழுக்கடைந்த கழிவறைகள், தூய்மையற்ற பணி சூழல் காணப்படுகிறது.

சென்பிரான்சிஸ்கோ அலுவலகத்தில் பணியாளர்கள் உள்ளிட்டோர் சாப்பிட்டு விட்டு, கீழே போடும் குப்பைகள், மீதமுள்ள உணவுகள் மற்றும் வியர்வை நாற்றம் ஆகியவை நிறைந்து காணப்படுகிறது என்று தி நியூயார்க் டைம்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ள செய்தி தெரிவிக்கின்றது.

எலான் மஸ்க்கின் மற்றொரு நடவடிக்கையாக சென்பிரான்சிஸ்கோ நிறுவன அலுவலகத்தில் 4 தளங்களை மூடும்படியும், மீதமுள்ள 2 தளங்களில் ஊழியர்கள் பணிபுரியும்படியும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதேபோல், நியூயார்க் அலுவலகங்களில் உள்ள தூய்மை பணியாளர்கள் மற்றும் பாதுகாவலர்களையும் மஸ்க் வேலையில் இருந்து தூக்கி உள்ளார். எனினும், சென்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள அலுவலகத்திற்கான வாடகையை ட்விட்டர் நிறுவனம் செலுத்த தவறி விட்டது என்றும் தி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி தெரிவித்து உள்ளது.

இதுபற்றி மஸ்க் கூறும்போது, 300 கோடி அமெரிக்க டொலர் மதிப்பிலான பட்ஜெட் பற்றாக்குறையை தவிர்க்கவே இந்த சிக்கன நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் தெரிவித்து உள்ளார்.

ட்விட்டரின் கலிபோர்னியா, சாக்ரமெண்டோ நகர தகவல் மையங்களும் அவரது நடவடிக்கையின் ஒரு பகுதியாக மூடப்பட்டு உள்ளன. இது ட்விட்டரில் செயற்பாட்டை பாதிக்கும் என பணியாளர்கள் கூறியுள்ளனர். அவர்களிடம் சிக்கன நடவடிக்கை மிக அவசியம் என்று பதிலாக எடுத்து கூறப்பட்டு உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது.

நன்றி தமிழன்

Latest news

நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழா!

இனிய பொங்கல்! இந்த வாரம் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்றது பெருமையாக இருந்தது.எனது சகாக்களான சாலி...

குயின்ஸ்லாந்து கட்டிட விதிமுறைகளை ஒதுக்கி வைக்க கோரிக்கை!

கட்டுமானத் தொழில் தொடர்பான புதிய விதிமுறைகளை விதிப்பதைத் தவிர்க்குமாறு குயின்ஸ்லாந்து மாநிலத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பணியாளர்கள்...

மூன்றாம் சார்லஸ் மன்னரின் முத்திரைகள் விற்பனைக்கு!

மூன்றாம் சார்லஸ் மன்னரின் உருவம் கொண்ட தபால் தலைகள் பிரித்தானிய தபால் துறையால் வெளியிடப்பட்டுள்ளன. வரும் ஏப்ரல் மாதம்...

துருக்கி நிலநடுக்கத்தில் 4 ஆஸ்திரேலியர்கள் இன்னும் காணவில்லை!

துருக்கிய நிலநடுக்கத்தில் 04 அவுஸ்திரேலியர்கள் காணாமல் போயுள்ளதாக வெளிவிவகார திணைக்களம் தெரிவித்துள்ளது. அவர்களைப் பற்றிய தகவல்கள் காத்திருக்கின்றன என்று...

பிரபல காற்பந்து வீரர் மாயம் – துருக்கி நிலநடுக்கம்!

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள சிறிய தொழில் நகரம் காசியான்டெப். இங்கு நேற்று (06) அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்...

இந்தியாவில் டெஸ்ட் தொடரை வெல்வது என்பது மலையை சாய்ப்பது போல கடினமானது – ஸ்டீவ் ஸ்மித்

இந்தியா - ஆவுஸ்திரேலியா அணிகள் மோதும் பாா்டா் - காவஸ்கா் கிரிக்கெட் தொடா், டெஸ்ட் ஆட்டத்துடன் வியாழக்கிழமை நாளை (09) ஆரம்பமாகவுள்ளது.