Medicare மற்றும் கடுமையான மருத்துவப் பற்றாக்குறையில் கவனம் செலுத்துமாறு பிரீமியர் அந்தோனி அல்பனீஸைக் கேட்க பல மாநிலப் பிரதமர்கள் தயாராகி வருகின்றனர்.
இந்த வருடத்தின் முதலாவது தேசிய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான கோரிக்கை விடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவத்துறையை வலுப்படுத்த அல்பானீஸ் அரசாங்கம் 750 மில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது, ஆனால் அது போதாது என்று சுகாதாரத் துறையில் உள்ள பல நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த 20 வருடங்களில் வைத்தியர்களுக்கு செலுத்த வேண்டிய தொகை 08 பில்லியன் டொலர்களை அண்மித்துள்ளதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் முதல் தேசிய அமைச்சரவை கூட்டம் அடுத்த மாதம் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது.