Newsவிக்டோரியா வாகன விபத்தில் 4 இந்தியர்கள் பலி!

விக்டோரியா வாகன விபத்தில் 4 இந்தியர்கள் பலி!

-

ஜனவரி 4 அன்று, மெல்பனின் வடக்கே Sheppartonஇல் நடந்த கார் விபத்தில் நான்கு இந்தியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் காயமடைந்தனர்.

கொல்லப்பட்ட நால்வரும் ஆண்கள் எனவும், Shepparton பகுதியிலுள்ள பண்ணை ஒன்றில் வேலைசெய்துவிட்டு நண்பரின் காரில் திரும்பிப் போய்கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விக்டோரியா பொலிஸாரின் கூற்றுப்படி, Pine Lodge North Roadஇலுள்ள ஒரு சந்தியில் மாலை 4:45 மணியளவில் Peugeot கார் ஒன்றும் Toyota Hilux ute-உம் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.

Peugeot இன் ஓட்டுநர் மார்பில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் உள்ளார், மற்ற வாகன ஓட்டுநருக்கு சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டன.

Advertisement

Peugeot காரில் ஐந்து பேர் இருந்ததாகவும், பின் இருக்கைகளில் அமர்ந்திருந்த மூவரும் seatbelt-ஆசனப்பட்டி அணிந்திருக்கவில்லை எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து குறித்த விசாரணைகளை சிறப்பு புலனாய்வுப்பிரிவினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.

Latest news

அல்பானீஸுக்கு இடம் கொடுக்காமல், ஆஸ்திரேலிய தலைவரை ரகசியமாக சந்திக்கிறார் டிரம்ப்

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்காவிற்கான ஆஸ்திரேலிய தூதர் Kevin Rudd இடையேயான ரகசிய சந்திப்பு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. ஜனவரி 11, 2025 அன்று புளோரிடாவில்...

டிரம்பின் சூப்பர்மேன் போஸ்டரை வெளியிட்ட வெள்ளை மாளிகை

"Superman" திரைப்படத்திற்கான போஸ்டரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சூப்பர் ஹீரோவாக மறுவடிவமைப்பு செய்யப்பட்ட புகைப்படத்தை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. இந்தப் புகைப்படத்தில், டிரம்ப்புக்குப் பதிலாக David...

ஏலத்தில் விற்கப்பட்ட பல மில்லியன் டாலர் மதிப்புள்ள கைப்பை

Jane Birkin-இன் அசல் Hermès பை ஏலத்தில் $15.29 மில்லியனுக்கு விற்கப்பட்டுள்ளது. பாரிஸில் நடந்த Sotheby-இன் ஏலத்தில் ஒன்பது ஏலதாரர்கள் தொலைபேசி மூலமாகவும் நேரிலும் போட்டியிட்டனர். ஜப்பானைச் சேர்ந்த...

Crypto ATM மோசடியில் $2.5 மில்லியன் இழப்பு

முதியவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட Crypto ATM மோசடியில் 15 பேர் 2.5 மில்லியன் டாலர்களை இழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மோசடியில் சிக்கிய ஒருவர் Crypto ATM-இல் இருந்து...

மலேசியாவுக்கான அமெரிக்க தூதராக ஆஸ்திரேலியரை நியமித்த டிரம்ப்

மலேசியாவுக்கான அமெரிக்க தூதராக முன்னாள் ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார். பறவைக் காய்ச்சலை எதிர்த்துப் போராட புறாக்களை கொல்ல வேண்டும் என்று அழைப்பு...