Articleஅலாஸ்கா - ஆஸ்திரேலியா 8,435 மைல் பயணம் - கின்னஸில் இடம்பெற்ற...

அலாஸ்கா – ஆஸ்திரேலியா 8,435 மைல் பயணம் – கின்னஸில் இடம்பெற்ற பறவை!

-

சாதனைகள் மனிதர்களுக்கு புதிது, பெரிது ஆனால் வானத்துப் பறவைகளுக்கும், விலங்குகளுக்கு அவை பொருட்டேயில்லை. ஒரு பறவை அதன் போக்கில் நிற்காமல் 8 ஆயிரத்து 435 மைல்கள் பயணித்திருப்பதை புதிய சாதனை என்று பட்டியலிட்டுள்ளது ‘The Guinness World Records’ அமைப்பு.

பறவைகள் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்வது காலங்காலமாக நடக்கும் ஒரு செயல். இடம்பெயர்ந்து செல்லும் பழக்கம் கொண்ட பார் டெய்ல்ட் காட்விட் (Limosa lapponica) என்ற பறவையினத்தைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட பறவையின் உடலில் வைத்திருந்த சிப் மூலம் இந்த சாதனை அம்பலமாகியுள்ளது.

அலாஸ்காவில் புறப்பட்ட “234684” என்ற டேக் எண் கொண்ட அந்த பறவை 11 நாட்களில் ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியாவை அடைந்தது. இந்தப் பயணத்தின்போது இந்தப் பறவை 13,560 கிலோ மீட்டரைக் கடந்துள்ளது. அதுவும் உணவுக்காகவோ, ஓய்வுக்காகவோ எங்குமே நிற்காமல் பறந்துள்ளது. இந்தப் பறவை கடந்த தூரத்தை ஒப்பிட்டால் அது லண்டனில் இருந்து நிவ்யோர்க்குக்கு இரண்டரை முறை சென்றுவருவதற்கு சமமாகும்.

பறவையின் பின்புறத்தில் இணைக்கப்பட்டிருந்த 5ஜி சாட்டிலைட் டேக் அதன் பயணத்தை துல்லியமாக பதிவு செய்துள்ளது. இந்த வரலாற்றுப் பயணம் கடந்த அக்டோபர் 13, 2022ல் தொடங்கி சரியாக 11 நாளில் முடிந்துள்ளது. இதற்கு முன்னதாக இதே காட்விட் இனத்தைச் சேர்ந்த பறவை 217 மைல் பறந்திருந்ததுதான் சாதனையாக பதிவாகியிருந்தது. இப்போது மீண்டும் அதே இனத்தின் பறவை இன்னொரு சாதனையை செய்துள்ளது.

சாதனைப் பறவையின் இந்த சாதனை குறித்து பர்ட்லைஃப் டாஸ்மேனியாவின் ஆராய்ச்சியாளர் எரிக் ஹோலர், “இந்தப் பறவை தனது ஓய்வற்ற பயணத்தால் தனது எடையில் பாதியை இழந்துள்ளது” என்றார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் பிரித்தானியர்

மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் பிரித்தானிய நாட்டவர் ஒருவர் நியோ- நாசி அமைப்பில் உறுப்பினராக இருப்பதாக எழுந்த சந்தேகத்தை தொடர்ந்து அவரை நாட்டை விட்டு வெளியேற்ற...

சிவப்பு அறிவிப்புகள் இருந்தும் ஏமன் தீவுக்குச் சென்று சிக்கிய ஆஸ்திரேலியர்கள்

ஏமன் தீவு Socotra-இற்கு சுற்றுலா சென்ற ஆஸ்திரேலியர்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்குக் காரணம்,...

Grok AI-ஆல் உருவாக்கப்பட்ட பெண்களின் நிர்வாணப் படங்களை விசாரிக்கும் ஆஸ்திரேலியா

எலோன் மஸ்க்கின் X சமூக ஊடக வலையமைப்பான 'Grok' AI chatbot, பெண்கள் மற்றும் இளம் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை (Deepfakes) உருவாக்கிய...

பிலிப்பைன்ஸில் எரிமலை வெடிப்பு – 3000 குடும்பங்கள் வெளியேற்றம்

பிலிப்பைன்ஸின் Albay மாகாணத்தில் அமைந்துள்ள மாயோன் எரிமலை வெடிப்பு தொடர்பில் எச்சரிக்கை நிலை உயர்த்தப்பட்டுள்ளது. 05 கட்டங்களாக அமைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை நிலை, தற்போது மூன்றாம் நிலைக்கு...

எடை இழப்பு மருந்துகளை நிறுத்திய பிறகு என்ன நடக்கும்?

உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாகிவிட்ட எடை இழப்பு மருந்துகளின் பயன்பாடு குறித்த புதிய ஆய்வை பிரிட்டிஷ் மருத்துவ இதழ் (BMJ) வெளியிட்டுள்ளது. இந்த மருந்துகளின் பயன்பாட்டை நிறுத்திய...

வட கரோலினாவில் பிரபல நீச்சல் தலத்திற்கு அருகில் மிகப்பெரிய முதலை கண்டுபிடிப்பு

மழைக்காலத்தின் உச்சத்தில் வடக்குப் பிரதேசத்தில் உள்ள ஒரு பிரபலமான நீச்சல் இடத்திற்கு அருகில் 4.9 மீட்டர் உயரமுள்ள முதலை ஒன்று காணப்பட்டுள்ளது. டார்வினுக்கு தெற்கே சுமார் 150...