Articleஅலாஸ்கா - ஆஸ்திரேலியா 8,435 மைல் பயணம் - கின்னஸில் இடம்பெற்ற...

அலாஸ்கா – ஆஸ்திரேலியா 8,435 மைல் பயணம் – கின்னஸில் இடம்பெற்ற பறவை!

-

சாதனைகள் மனிதர்களுக்கு புதிது, பெரிது ஆனால் வானத்துப் பறவைகளுக்கும், விலங்குகளுக்கு அவை பொருட்டேயில்லை. ஒரு பறவை அதன் போக்கில் நிற்காமல் 8 ஆயிரத்து 435 மைல்கள் பயணித்திருப்பதை புதிய சாதனை என்று பட்டியலிட்டுள்ளது ‘The Guinness World Records’ அமைப்பு.

பறவைகள் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்வது காலங்காலமாக நடக்கும் ஒரு செயல். இடம்பெயர்ந்து செல்லும் பழக்கம் கொண்ட பார் டெய்ல்ட் காட்விட் (Limosa lapponica) என்ற பறவையினத்தைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட பறவையின் உடலில் வைத்திருந்த சிப் மூலம் இந்த சாதனை அம்பலமாகியுள்ளது.

அலாஸ்காவில் புறப்பட்ட “234684” என்ற டேக் எண் கொண்ட அந்த பறவை 11 நாட்களில் ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியாவை அடைந்தது. இந்தப் பயணத்தின்போது இந்தப் பறவை 13,560 கிலோ மீட்டரைக் கடந்துள்ளது. அதுவும் உணவுக்காகவோ, ஓய்வுக்காகவோ எங்குமே நிற்காமல் பறந்துள்ளது. இந்தப் பறவை கடந்த தூரத்தை ஒப்பிட்டால் அது லண்டனில் இருந்து நிவ்யோர்க்குக்கு இரண்டரை முறை சென்றுவருவதற்கு சமமாகும்.

பறவையின் பின்புறத்தில் இணைக்கப்பட்டிருந்த 5ஜி சாட்டிலைட் டேக் அதன் பயணத்தை துல்லியமாக பதிவு செய்துள்ளது. இந்த வரலாற்றுப் பயணம் கடந்த அக்டோபர் 13, 2022ல் தொடங்கி சரியாக 11 நாளில் முடிந்துள்ளது. இதற்கு முன்னதாக இதே காட்விட் இனத்தைச் சேர்ந்த பறவை 217 மைல் பறந்திருந்ததுதான் சாதனையாக பதிவாகியிருந்தது. இப்போது மீண்டும் அதே இனத்தின் பறவை இன்னொரு சாதனையை செய்துள்ளது.

சாதனைப் பறவையின் இந்த சாதனை குறித்து பர்ட்லைஃப் டாஸ்மேனியாவின் ஆராய்ச்சியாளர் எரிக் ஹோலர், “இந்தப் பறவை தனது ஓய்வற்ற பயணத்தால் தனது எடையில் பாதியை இழந்துள்ளது” என்றார்.

Latest news

குயின்ஸ்லாந்தில் 11 ஆண்டுகளாக தன் மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை

குயின்ஸ்லாந்தின் டூவூம்பாவில் தனது மகளை 11 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 51 வயதான சந்தேக நபர், 4 முதல்...

சூரிய சக்தி மூலம் பணம் சம்பாதித்த விக்டோரியா மக்களுக்கு நடந்தது என்ன?

விக்டோரியாவில் சோலார் ஃபீட்-இன் கட்டணங்களின் வீழ்ச்சி ஒரு முக்கிய ஊக்கத்தொகையின் மதிப்பைக் குறைப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது . ஃபீட்-இன் டாரிஃப் என்பது சோலார் பேனல்களை வைத்திருக்கும் வீட்டு...

ஆஸ்திரேலியர்களின் Rewords Point குறித்து நடத்தப்பட்ட ஆய்வு

ஆஸ்திரேலியர்களில் 79 சதவீதம் பேர் Rewords புள்ளிகளை பணம் பெற பயன்படுத்துவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 1039 ஆஸ்திரேலியர்கள் கணக்கெடுப்புக்காக பணியமர்த்தப்பட்டனர் மற்றும் பதிலளித்தவர்களில் 904 பேர்...

இன்று முதல் பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதிப்பு

இன்று முதல், தெற்கு ஆஸ்திரேலியாவில் பொது வெளியில் புகைபிடிப்பது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்த தடை இன்று முதல் வழக்கமான சிகரெட் மற்றும் எலக்ட்ரானிக் சிகரெட்டுகளுக்கு அமுலுக்கு...

இன்று முதல் பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதிப்பு

இன்று முதல், தெற்கு ஆஸ்திரேலியாவில் பொது வெளியில் புகைபிடிப்பது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்த தடை இன்று முதல் வழக்கமான சிகரெட் மற்றும் எலக்ட்ரானிக் சிகரெட்டுகளுக்கு அமுலுக்கு...

தவறு செய்த NSW ஜோடிக்கு வழங்கப்பட்ட மறக்க முடியாத தண்டனை

குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நியூ சவுத் வேல்ஸ் தம்பதிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஊனமுற்ற சிறுவனை தங்கள் வீட்டில் துஷ்பிரயோகம் செய்ததற்காக ஜூலியா மற்றும் பால்...