வெடிகுண்டு மிரட்டல் காரணமாக ஜெட்ஸ்டார் விமானம் மத்திய ஜப்பானில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
டோக்கியோவின் நரிட்டா விமான நிலையத்தில் இருந்து ஃபுகுவோகா நகருக்கு உள்நாட்டு விமானத்தில் சென்ற விமானத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக ஒருவர் போன் செய்ததாக கூறப்படுகிறது.
அவசரமாக தரையிறக்கப்பட்ட பிறகு, ஜெட்ஸ்டார் விமானம் முழுமையாக சோதனை செய்யப்பட்டது, ஆனால் வெடிபொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக ஜெட்ஸ்டார் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.