கடந்த மாதம் நடந்த “ஏ” லீக் கால்பந்து போட்டியின் போது கலவரத்தில் ஈடுபட்டதற்காக மெல்போர்ன் கால்பந்து ரசிகர்களுக்கு $550,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
17 பார்வையாளர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கால்பந்து கூட்டமைப்பு ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய கால்பந்து வரலாற்றில் கரும்புள்ளியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் கால்பந்து வீரர் மற்றும் நடுவர் காயமடைந்தனர்.
ரத்து செய்யப்பட்ட போட்டியை மீண்டும் வரும் ஏப்ரல் மாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய கால்பந்து கூட்டமைப்பு, எதிர்காலத்தில் நடைபெறும் அனைத்து உள்நாட்டு கால்பந்து போட்டிகளிலும் பாதுகாப்பு கடுமையாக்கப்படும் என்பதை உறுதி செய்கிறது.