அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியில் பங்குபற்றிய இலங்கை அணி தொடர்பான சர்ச்சைக்குரிய செய்திகள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கை இலங்கை விளையாட்டு அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
நிதி துஷ்பிரயோகம், சமூக ஊடகங்களின் செல்வாக்கு, மதப் பிரிவின் செல்வாக்கு உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குழுவின் அறிக்கையில் குறிப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக விளையாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விசாரணைக்காக, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜனி வீரவர்தன தலைமையில் 5 பேர் கொண்ட விசாரணைக் குழுவை விளையாட்டுத்துறை அமைச்சர் நியமித்தார்.
இதேவேளை, யுவதி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கை வீரர் தனுஷ்க குணதிலக நாளை சிட்னி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
பல கடுமையான நிபந்தனைகளுக்கு உட்பட்டு தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார்.