Newsசொத்து மதிப்பு வீழ்ச்சியில் கின்னஸ் சாதனை படைத்தார் எலான் மஸ்க்

சொத்து மதிப்பு வீழ்ச்சியில் கின்னஸ் சாதனை படைத்தார் எலான் மஸ்க்

-

வரலாறு காணாத அளவுக்கு சொத்து மதிப்பு வீழ்ச்சியடைந்ததால், உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் இடம்பிடித்துள்ளார்.

ட்விட்டர் நிறுவனத்தை தொட்டது முதல் தொடர்ந்து எதிர்மறையான செய்திகளுக்கே பெயர்பெற்று வந்த எலான் மஸ்க், தற்போது உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதும் கூட ஒரு எதிர்மறையான விடயத்துக்காகத்தான்.

அதாவது, 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை எலான் மஸ்க் தனது சொத்து மதிப்பில் 182 பில்லியன் டொலர் வரை இழந்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், பல்வேறு தகவல்கள் இதனை 200 பில்லியன் டொலர்கள் வரை என்று தெரிவிக்கின்றன.

துல்லியமான இழப்பு தெரியவருவது அசாதாரணமானது என்றாலும், மஸ்க் இழந்திருக்கும் இழப்பானது, ஏற்கனவே பதிவான இழப்பை விட மிக அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. 

இதற்கு முன்பு, 2000ஆவது ஆண்டில் ஜப்பானைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப முதலீட்டாளர் மசாயோசி 58.6 பில்லியன் டொலர்களை இழந்திருந்ததே கின்னஸ் சாதனையாக இருந்துள்ளது.

நன்றி தமிழன்

Latest news

வான்வெளியை மூடிய ஈரான் – 2,500 போராட்டக்காரர்கள் பலி

ஈரானிய அரசாங்கத்திற்கு எதிரான பொதுமக்கள் போராட்டங்கள் அதிகரித்து வருவதால், நாட்டின் வான்வெளி தற்போது மூடப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் விமானப் போக்குவரத்து...

விக்டோரியா வானிலையில் ஏற்படப்போகும் பெரிய மாற்றம்

ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையில் கடந்த வாரம் நீடித்த கடுமையான வெப்பமான வானிலை முடிவுக்கு வந்து, வானிலை முறையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய...

பிரிட்டிஷ்-ஆஸ்திரேலிய இரட்டைக் குடியுரிமைகளுக்கான புதிய சட்டம்

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இரட்டை பிரிட்டிஷ் அல்லது ஐரிஷ் குடியுரிமை உள்ளவர்களுக்கான புதிய பயண விதிகளை பிரிட்டிஷ் அரசாங்கம் அறிவித்துள்ளது. பெப்ரவரி 25 ஆம் திகதி முதல் அமலுக்கு...