Newsநித்தியானந்தாவின் கைலாசாவுக்கு அமெரிக்கா அங்கீகாரம்.

நித்தியானந்தாவின் கைலாசாவுக்கு அமெரிக்கா அங்கீகாரம்.

-

நித்தியானந்தாவின் கைலாசாவை அங்கீகரிக்கும் வகையில், ஐக்கிய அமெரிக்காவுடன் கடந்த ஜனவரி 11ஆம் திகதி இருதரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஐக்கிய கைலாசா மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்திலுள்ள நெவார்க் சிட்டியும் “இருதரப்பு நெறிமுறை ஒப்பந்தத்தில்” கையெழுத்திடும் விழா நெவார்க் நகர அரங்கில் நடைபெற்றது.

இந்த விழாவில் ஐ.நா.வுக்கான கைலாசாவின் நிரந்தர தூதர் விஜயப்ரியா நித்யானந்தா, மேயர் பராகா, துணை மேயர் டிஃப்ரீடாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும், நியூ ஜெர்சியிலிருந்து கைலாசாவின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

அமெரிக்காவின் நெவார்க் நகரத்துடனான ஒப்பந்தத்தில், ஒரு தரப்பு மக்களின் மேம்பாட்டிற்குத் தேவையான வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக ஒப்பந்தம் செய்யப்பட்டது.

பேரிடர், காலநிலை மாற்றம் போன்றவற்றின் தாக்கங்களை பரஸ்பர உதவியுடன் எதிர்கொள்வது, மேலும், மனநலப் பிரச்சினைகள், வன்முறை, வறுமை, கல்வியறிவின்மை போன்ற மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளில் பரஸ்பர உதவி சார்ந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

நன்றி தமிழன்

Latest news

துப்பாக்கிகளை திரும்பப் பெறும் திட்டம் தொடர்பாக மாநில அரசுகளுக்கு இடையே கருத்து வேறுபாடு

Bondi பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் நேற்று இரவு செனட்டில் நிறைவேற்றப்பட்டன. இதில் உரிமையாளர்களிடமிருந்து துப்பாக்கிகளைத் திரும்ப வாங்கும்...

இலவச மெட்ரோ சேவையை அதிகம் பயன்படுத்தும் ஆஸ்திரேலியர்கள்

சமீபத்தில் தொடங்கப்பட்ட மெட்ரோ சுரங்கப்பாதை திட்டத்தின் மூலம், விக்டோரியா மக்கள் மெட்ரோ சுரங்கப்பாதையில் இலவச வார இறுதி பயணத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதாகக் கூறப்படுகிறது. இந்த கோடையில்...

Bondi நாயகன் பற்றி வெளியான சோகமான செய்தி

Bondi தாக்குதலில் இரண்டு முறை சுடப்பட்ட பிறகு, தனது கையின் அசைவை ஒருபோதும் திரும்பப் பெற முடியாது என்று Bondi ஹீரோ அகமது அல் அகமது...

விக்டோரியா சுகாதார ஊழியர்கள் 6% ஊதிய உயர்வு கோரி பாரிய போராட்டம்

விக்டோரியாவில் சுகாதார ஊழியர்களின் தொழில்முறை வேலைநிறுத்தம் நேற்று வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. பணவீக்கத்திற்கு ஏற்ப 6% ஊதிய உயர்வை அடைவதை நோக்கமாகக் கொண்ட இந்த வேலைநிறுத்தத்தில் 10,000...

சிட்னியில் அதிகரித்து வரும் சுறா தாக்குதல்கள்

கடந்த 60 ஆண்டுகளில் சிட்னியில் சுறா தாக்குதல் எதுவும் நடந்ததில்லை, ஆனால் கடந்த இரண்டு நாட்களில் இதுபோன்ற சுறா தாக்குதல்களால் மூன்று இறப்புகள் பதிவாகியுள்ளன. கடந்த இரண்டு...

Bondi நாயகன் பற்றி வெளியான சோகமான செய்தி

Bondi தாக்குதலில் இரண்டு முறை சுடப்பட்ட பிறகு, தனது கையின் அசைவை ஒருபோதும் திரும்பப் பெற முடியாது என்று Bondi ஹீரோ அகமது அல் அகமது...